search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாஜகவுக்கு இழுக்க முயற்சி: அசோக் சவான் குற்றச்சாட்டு
    X

    காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாஜகவுக்கு இழுக்க முயற்சி: அசோக் சவான் குற்றச்சாட்டு

    காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதாவுக்கு இழுக்க முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் முயற்சி செய்கிறார் என அசோக் சவான் குற்றம்சாட்டி உள்ளார்.
    மும்பை :

    மராட்டிய மாநில காங்கிரஸ் கட்சி, வர இருக்கும் சட்டமன்ற தேர்தல் குறித்து மாவட்ட வாரியாக 2 நாள் ஆய்வு கூட்டத்தை தொடங்கியது. இதில் மரத்வாடா மற்றும் வட மராட்டிய கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மாநிலத்தில் நிலவி வரும் வறட்சி, பாராளுமன்ற தேர்தல் தோல்வி மற்றும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    கூட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் பேசியதாவது:-

    காங்கிரசில் இருந்து யாரும் விலகி செல்லமாட்டார்கள். முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் எங்கள் கட்சியை சேர்ந்தவர்களை பா.ஜனதாவில் வந்து சேருமாறு அழைக்கிறார். முதல்-மந்திரி காங்கிரசை உடைக்க கடுமையாக உழைக்கிறார். அவர் எங்கள் கட்சியை சேர்ந்த பல எம்.எல்.ஏ.க்களை இழுக்க முயற்சி செய்கிறார். அந்த அழைப்பை ஏற்று யாரும் செல்லமாட்டார்கள்.

    பாராளுமன்ற தேர்தல் போல சட்டமன்ற தேர்தலிலும் முடிவுகள் வராது. பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளது. அதற்காக அவர்கள் அதிகம் மகிழ்ச்சி அடைய வேண்டாம். மாநில அரசின் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பாராளுமன்ற தேர்தல் முடிவில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கும்.

    பாராளுமன்ற தேர்தலில் 10 தொகுதிகளில் வஞ்சித் பகுஜன் அகாடியால் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர். எனவே சட்டமன்ற தேர்தலில் அந்த கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என பலர் விரும்புகின்றனர். ஆர்.எஸ்.எஸ். கொள்கையை காங்கிரஸ் எப்போதும் எதிர்க்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×