search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர் சுட்டுக் கொலை- 2 பேர் கைது
    X

    கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர் சுட்டுக் கொலை- 2 பேர் கைது

    கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வார்டு தலைவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தில் பாராளுமன்றத் தேர்தலின் போது பா.ஜனதா, இடதுசாரியினர், திரிணாமுல் காங்கிரசார் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா இடையே கடுமையான போட்டி நிலவியது. 42 தொகுதிகளில் 18 தொகுதிகளை தன்வசப்படுத்தி திரிணாமுல் காங்கிரசுக்கு பா.ஜனதா அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. தேர்தலின்போது ஏற்பட்ட அரசியல் வன்முறை தேர்தலுக்குப் பிறகும் தொடர்கிறது. 

    இப்போது கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    வடக்கு கொல்கத்தாவின் நிம்தா பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வார்டு தலைவர் நிர்மல் குண்டு, கடையொன்றில் நின்றுக்கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். 

    மோட்டார் சைக்கிளில் பின்புறம் சவாரி செய்தவர் நிர்மல் குண்டுவை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளார். இதில் இரு குண்டுகள் அவருடைய உடலில் பாய்ந்துள்ளது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் கொண்டு செல்லும் வழியிலே உயிரிழந்தார். இதுதொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள். சந்தேகத்தின்பேரில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

    நிர்மல் குண்டுவை கொலை செய்தது பாகவினர் தான் என திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இதனை பாஜக மாநில தலைவர் மறுத்துள்ளார். இது உள்கட்சி பிரச்சனையால் நடந்த கொலை என அவர் கூறியுள்ளார். 
    Next Story
    ×