search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜி-20 நிதி அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார் நிர்மலா சீதாராமன்
    X

    ஜி-20 நிதி அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார் நிர்மலா சீதாராமன்

    மத்திய நிதி அமைச்சராக முதல்முறையாக பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமன், ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார்.

    இந்தியா, அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உட்பட 20 நாடுகளை உறுப்பினர்களாக உள்ளடக்கிய கூட்டமைப்பு ஜி-20 என அழைக்கப்படுகிறது. இந்த ஜி-20 கூட்டமைப்பு ஆண்டு தோறும் மாநாடு ஒன்றை நடத்துகின்றது. அதில் உறுப்பு நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர்கள் கலந்துகொள்கின்றனர். இம்மாநாட்டில் சர்வதேச நிதி நிலவரம் , நிதி கொள்கைகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது.

    இந்நிலையில் 2019 ஆம் ஆண்டுக்கான ஜி-20 மாநாடு ஜூன் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் ஜப்பானில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்க உள்ளார். ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாசும் பங்கேற்பார் என தெரிகிறது. நிதியமைச்சராக பொறுப்பேற்ற பின் நிர்மலா சீதாராமன் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப்பயணம் இதுவாகும்.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×