search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலை போக்குவரத்துத்துறை மந்திரியாக நிதின் கட்கரி இன்று பொறுப்பேற்றார்
    X

    சாலை போக்குவரத்துத்துறை மந்திரியாக நிதின் கட்கரி இன்று பொறுப்பேற்றார்

    சாலை போக்குவரத்து துறை மந்திரியாக தேர்வு செய்யப்பட்ட நிதின் கட்கரி டெல்லியில் உள்ள அலுவலகத்தில் இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற நரேந்திர மோடி இரண்டாவது முறையாக மீண்டும் பிரதமராக நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் 54 மந்திரிகளும் பதவியேற்றுக் கொண்டனர். பிரதமர் மோடி உள்ளிட்ட மந்திரிகளுக்கு நேற்று துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இதற்கிடையே, நிதின் கட்கரி சாலை போக்குவரத்து துறை மந்திரியாக நியமனம் செய்யப்பட்டார்.



    இந்நிலையில், டெல்லியில் உள்ள சாலை போக்குவரத்து துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகத்துக்கு நிதின் கட்கரி இன்று காலை வந்தார். அவருக்கு அலுவலக அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து, நிதின் கட்கரி முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.
    Next Story
    ×