என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முன்ஜாமீனை ரத்து செய்ய அமலாக்கத்துறை வலியுறுத்தல் - ராபர்ட் வதேராவுக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்
Byமாலை மலர்27 May 2019 7:57 AM GMT (Updated: 27 May 2019 7:57 AM GMT)
சட்டவிரோதமான பணப் பரிமாற்றம் வழக்கில் ராபர்ட் வதேராவுக்கு விசாரணை நீதிமன்றம் அளித்த முன்ஜாமீனை ரத்து செய்யுமாறு டெல்லி ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை வலியுறுத்தியது.
புதுடெல்லி:
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மைத்துனர் ராபர்ட் வதேரா, லண்டனில் சுமார் 17 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் வாங்கிய விவகாரத்தில் சட்டவிரோதமான பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாக பொருளாதார அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இவ்வழக்கை விசாரிக்கும் டெல்லி சிறப்பு நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தேதி ராபர்ட் வதேராவுக்கு முன்ஜாமீன் வழங்கியபோது அனுமதி பெறாமல் அவர் வெளிநாடுகளுக்கு செல்ல கூடாது என நிபந்தனை விதித்திருந்தது.
இதற்கிடையில், வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு டெல்லி ரோவ்ஸ் அவென்யூ வளாகத்தில் உள்ள நீதிமன்றத்தில் ராபர்ட் வதேரா சமீபத்தில் மனு செய்திருந்தார்.
லண்டன் பங்களா
சட்டவிரோதமான பணப் பரிமாற்றம் வழக்கு தொடர்பான அமலாக்கத்துறை அதிகாரிகளின் விசாரணைக்கு ராபர்ட் வதேரா சரியாக ஒத்துழைப்பு அளிப்பதில்லை. அதனால், அவரை விசாரணை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியுள்ளது.
எனவே, இந்த வழக்கின் தன்மை அறியாமல் ராபர்ட் வதேராவுக்கும் அவரது நண்பர் மனோஜ் அரோராவுக்கும் விசாரணை நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என அமலாக்கத்துறையின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறையின் கோரிக்கை தொடர்பாக பதிலளிக்குமாறு ராபர்ட் வதேரா, மனோஜ் அரோரா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்ட நீதிபதி சந்திர சேகர் இவ்வழக்கின் மறுவிசாரணையை ஜூலை 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Next Story
×