search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாரணாசி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து நாளை மோடி பேரணி
    X

    வாரணாசி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து நாளை மோடி பேரணி

    இரண்டாவது முறையாக தன்னை பாராளுமன்ற வேட்பாளராக தேர்ந்தெடுத்த வாரணாசி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க நாளை இங்கு வரும் பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
    லக்னோ:

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் குஜராத் மாநிலத்தின் வதோதரா மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் நரேந்திர மோடி இந்தமுறை வாரணாசி தொகுதியில் மட்டும் போட்டியிட்டார்.

    இந்த தேர்தலில் பிரதமர் மோடி 6 லட்சத்து 74 ஆயிரத்து 664 வாக்குகளை வாங்கி, 4 லட்சத்து 79 ஆயிரத்து 505 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இரண்டாவது இடத்தை பிடித்த சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் ஷாலினி யாதவ் ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 159 வாக்குகளை பெற்றார்.

    ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 548 வாக்குகளை பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.



    இந்நிலையில், இரண்டாவது முறையாக தன்னை பாராளுமன்ற வேட்பாளராக தேர்ந்தெடுத்த வாரணாசி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க நாளை இங்கு வரும் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

    காசி விஸ்வநாதர் ஆலயத்தில் வழிபாடும் செய்யும் மோடி நாளை முழுவதும் இந்த தொகுதியில் பிரசார கூட்டங்கள் மற்றும் சில முக்கிய சாலைகள் வழியாக திறந்த வாகனத்தில் பேரணியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பிரதமரின் வருகையையொட்டி வாரணாசி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
    Next Story
    ×