search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கட்சிகள் சாதித்தது என்ன? - மாநிலவாரியாக வெற்றி நிலவரம்
    X

    கட்சிகள் சாதித்தது என்ன? - மாநிலவாரியாக வெற்றி நிலவரம்

    ஆரவார பேச்சுக்கள், ஆவேச சவால்களுடன் பாராளுமன்ற தேர்தல் களத்தை சந்தித்த அரசியல் கட்சிகளுக்கு மாநிலவாரியாக இருந்த செல்வாக்கு என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
    புதுடெல்லி:

    17-வது பாராளுமன்ற தேர்தலில் மாநிலங்கள் வாரியாக அரசியல் கட்சிகளுக்கு கிடைத்த இடங்கள் வருமாறு:-

    தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 38 பாராளுமன்ற தொகுதிகளில் தி.மு.க. -23, காங்கிரஸ்-8, மார்க்சிஸ்ட் கம்யூ.-2, இந்திய கம்யூ.-2, விடுதலை சிறுத்தைகள் -1, இ.யூ.முஸ்லிம் லீக்-1, அ.தி.மு.க. -1.

    ஆந்திராவில் மொத்தமுள்ள 25 பாராளுமன்ற தொகுதிகளில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ்-22, தெலுங்கு தேசம் -3.

    அசாமில் மொத்தமுள்ள 14 பாராளுமன்ற தொகுதிகளில் பா.ஜனதா -9, காங்கிரஸ்-3, ஐக்கிய ஜனநாயக முன்னணி-1, சுயேச்சை -1.

    பீகாரில் மொத்தமுள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளில் பா.ஜனதா -17, ஐக்கிய ஜனதாதளம் -16, லோக் ஜனசக்தி -6, காங்கிரஸ் -1, சத்தீஷ்கார் 11, பா.ஜனதா -9, காங்கிரஸ்-2.

    கோவாவில் உள்ள 2 தொகுதிகளில் பா.ஜனதா -1, காங்கிரஸ்-1.

    குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளிலும் அரியானாவில் உள்ள 10 தொகுதிகளிலும் இமாசலப்பிரதேசத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் பாஜக வெற்றி.

    காஷ்மீரில் உள்ள 6 தொகுதிகளில் பா.ஜனதா -3, தேசிய மாநாடு கட்சி -3. ஜார்கண்டில் உள்ள 14 தொகுதிகளில் பா.ஜனதா -11, ஜா.மு.மோ -1, காங்கிரஸ்-1, ஏ.ஜே.எஸ்.யூ.-1.

    கர்நாடகா மாநிலத்தில் உள்ள 28 தொகுதிகளில் பா.ஜனதா -25, காங்கிரஸ்-1, ம.ஜ.தளம் -1, சுயேச்சை -1. கேரளாவில் உள்ள 20 தொகுதிகளில் காங்கிரஸ் -15, மார்க்சிஸ்ட் கம்யூ.-1, இ.யூ.முஸ்லிம் லீக் -2, பிற கட்சிகள் -2.

    மத்தியப்பிரதேசத்தில் உள்ள 29 தொகுதிகளில் பா.ஜனதா -28, காங்கிரஸ்-1. மகாராஷ்டிராவில் உள்ள 48 தொகுதிகளில் பா.ஜனதா -23, சிவசேனா -18, தேசியவாத காங்.-4, காங்கிரஸ்-1, பிற கட்சிகள் -2.

    மணிப்பூரில் உள்ள 2 தொகுதிகளில் பா.ஜனதா -1, நா.ம.மு. -1. மேகாலயாவில் உள்ள 2 தொகுதிகளில்
    காங்கிரஸ்-1, தேசிய மக்கள் கட்சி-1. மிசோரத்தில் உள்ள ஒரே தொகுதியில் மி.தே.முன்னணி வெற்றி. நாகாலாந்தில் உள்ள ஒரே தொகுதியில் தே.ஜ.மு.க. வெற்றி.

    ஒடிசாவில் உள்ள 21 தொகுதிகளில் பிஜூ ஜனதாதளம் -12, பா.ஜனதா -8, காங்கிரஸ்-1. பஞ்சாபில் உள்ள 13 காங்கிரஸ்-8, அகாலிதளம் -2, ஆம் ஆத்மி -1, பா.ஜனதா -2. ராஜஸ்தானில் உள்ள 25 தொகுதிகளில் பா.ஜனதா -24 இடங்களை கைப்பற்றியது.

    சிக்கிமில் உள்ள ஒரே தொகுதியில் சிக்கிம் கிராந்திக்காரி மோர்ச்சா வெற்றி. அருணாசலபிரதேசத்தில் உள்ள 2 தொகுதிகளிலும் பா.ஜனதா வென்றது. தெலுங்கானாவில் உள்ள 17 தொகுதிகளில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி-9, பா.ஜனதா -4, காங்கிரஸ்-3, மஜ்லிஸ் கட்சி-1.

    திரிபுராவில் உள்ள 2 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி. உத்தரபிரசேதத்தில் உள்ள 80 தொகுதிகளில்
    பா.ஜனதா -62, பகுஜன் சமாஜ்-10, சமாஜ்வாடி -5, அப்னாதளம் -2, காங்கிரஸ் -1. உத்தரகாண்டில் உள்ள 5 தொகுதிகளையும் பா.ஜனதா பிடித்தது.

    மேற்கு வங்காளத்தில் உள்ள 42 தொகுதிகளில் திரிணாமுல் காங்.-22, பா.ஜனதா -18, காங்கிரஸ்-2. அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ள ஒரே தொகுதியில் காங்கிரஸ் வெற்றி. சண்டிகாரில் உள்ள ஒரே தொகுதியில் பா.ஜனதா வெற்றி.



    யூனியன் பிரதேசங்களான தத்ராநகர் ஹவேலியில் உள்ள ஒரே தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் வெற்றி. டாமன் டையூவில் உள்ள ஒரே தொகுதியில் பா.ஜனதா வெற்றி. டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி.

    லட்சத்தீவுவில் உள்ள ஒரே தொகுதியில் காங்கிரஸ் வெற்றி. இதேபோல் புதுச்சேரியில் உள்ள தொகுதியிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

    Next Story
    ×