search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலைகள் இல்லை, வாக்குகள் இல்லை: எந்திரத்தை உடைத்து தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்
    X

    சாலைகள் இல்லை, வாக்குகள் இல்லை: எந்திரத்தை உடைத்து தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்

    சாலை வசதிகள் இல்லை, ஆகவே வாக்களிக்க மாட்டோம் என்று பீகாரில் வாக்குச்சாவடிக்கு எந்திரங்களை எடுத்துச்சென்ற வாகனத்தை சேதப்படுத்தி கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்தனர்.
    59 பாராளுமன்ற தொகுதிகளுக்கு இறுதிக்கட்ட தேர்தல் நடக்கிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பீகாரில் உள்ள 8 தொகுதிகளும் அடங்கும்.

    அங்குள்ள நலந்தா மாவட்டத்தில் உள்ள கிராமம் சந்தோரா. இந்த கிராமத்தில் உள்ள மக்கள் 299-வது நம்பர் வாக்குச்சாவடியில் வாக்களிக்க தேர்தல் அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.



    இதற்காக வாக்கு எந்திரங்களை அதிகாரிகள் காரில் கொண்டு சென்றனர். அப்போது உள்ளூர் மக்கள் வாகனத்தை வழிமறித்து சேதப்படுத்தியதுடன், வாக்கு எந்திரங்களையும் நொறுக்கினர். அத்துடன் ‘‘எங்கள் கிராமத்தில் சாலைகள் இல்லை. அதனால் வாக்குகள் இல்லை (No roads, No votes). நாங்கள் தேர்தலை புறக்கணிக்கிறோம்’’ என்று தெரிவித்தனர்.
    Next Story
    ×