search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சபரிமலை கோவிலுக்கு செல்ல மீண்டும் முயற்சி செய்த இளம்பெண்களால் பரபரப்பு
    X

    சபரிமலை கோவிலுக்கு செல்ல மீண்டும் முயற்சி செய்த இளம்பெண்களால் பரபரப்பு

    ஐயப்பன் கோவிலுக்குள் செல்ல 2 இரண்டு இளம்பெண்கள் மீண்டும் முயற்சி செய்த சம்பவத்தை அறிந்த இந்து அமைப்பினர், பாரதிய ஜனதா கட்சியினர் சபரிமலையில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜையின் போது திரளான அய்யப்ப பக்தர்கள் குவிவார்கள்.

    இது போல ஒவ்வொரு மாதமும் முதல் தேதி சபரி மலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி ஐயப்பனுக்கு பூஜைகள் நடைபெறும். தற்போது வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. வருகிற 19-ந்தேதி இரவு கோவில் நடை அடைக்கப்படுகிறது. சில நாட்களே சபரிமலை கோவில் நடை திறந்து இருக்கும் என்பதால் தற்போது சபரிமலையில் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    சபரிமலை கோவிலில் 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட இளம்பெண்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதில்லை. காலம் காலமாக இந்த ஐதீகம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவைத் தொடர்ந்து தற்போது அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்ற நிலை உள்ளது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அய்யப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தி வருவதால் சபரிமலை நடை திறக்கும் போது எல்லாம் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்படுகிறது.

    தற்போது சபரிமலை கோவிலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த இளம்பெண் உள்பட 2 பெண்கள் சபரிமலை கோவிலுக்கு செல்ல திட்டமிட்டனர். ஏற்கனவே சபரிமலை சென்று வந்த இளம்பெண்ணான பிந்துவும் சபரிமலைக்கு மீண்டும் செல்வதற்காக போலீசாரிடம் பாதுகாப்பு கேட்டார்.

    தற்போது சபரிமலைக்கு பிந்து உள்பட 3 பெண்களும் சென்றால் பாதுகாப்பு பிரச்சினை ஏற்படும் என்று கருதிய போலீசார் அது பற்றி அந்த பெண்களுக்கு அறிவுரை கூறினார்கள். இதை ஏற்றுக் கொண்ட அந்த 3 பெண்களும் அங்கிருந்துச் சென்றனர்.

    இதற்கிடையில் இந்த தகவல் கிடைத்து சபரிமலையில் இந்து அமைப்பினர், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் சபரிமலையில் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் இளம்பெண்கள் சபரிமலைக்கு செல்லாமல் இருக்க மலைப்பாதையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    Next Story
    ×