search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜீவ் காந்தி கொலை வழக்கு - 7 பேர் விடுதலைக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
    X

    ராஜீவ் காந்தி கொலை வழக்கு - 7 பேர் விடுதலைக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுவிப்பதற்கு எதிரான மனுவை சுப்ரீம் கோர்ட் இன்று தள்ளுபடி செய்தது. #SupremeCourt #RajivCaseConvicts
    புது டெல்லி:

    ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிப்பது பற்றி ஆளுநரே முடிவு எடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து அவர்களை விடுவிக்கும்படி ஆளுநருக்கு தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்தது. இதன் மீது ஆளுநர் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.

    இந்நிலையில் ராஜீவ் கொலை சம்பவத்தின்போது உயிரிழந்த 15 பேரின் குடும்பத்தினர் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து மனு அளித்தனர். அதில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கக்கூடாது என குறிப்பிட்டிருந்தனர். இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிலும் அவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக சுப்ரீம் கோர்ட் முடிவெடுக்க முடியாது. விடுதலை குறித்து ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும்’ என கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.   
    Next Story
    ×