search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சபாநாயகரின் நோட்டீசுக்கு எதிராக கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
    X

    சபாநாயகரின் நோட்டீசுக்கு எதிராக கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

    அறந்தாங்கி எம்எல்ஏ மற்றும் விருத்தாசலம் எம்எல்ஏவைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபுவும், தனக்கு எதிராக சபாநாயகரின் நடவடிக்கைக்கு தடை கேட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். #MLAsDisqualification #SpeakerDhanapal
    புதுடெல்லி:

    அதிமுகவைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி(அறந்தாங்கி), வி.டி.கலைச்செல்வன்(விருத்தாசலம்), பிரபு (கள்ளக்குறிச்சி) ஆகியோர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் தினகரனுடன் தொடர்பில் உள்ளதாகவும், அவர் சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவதால் அவர்கள் மீது கட்சி தாவல் தடைச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சபாநாயகரிடம் அதிமுக கொறடா ராஜேந்திரன் புகார் மனு அளித்தார்.

    அதனை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் தனபால், மூன்று பேரிடமும் விளக்கம் கேட்டு தனபால் கடந்த 2-ந்தேதி நோட்டீஸ் அனுப்பினார். இந்த நோட்டீசை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ரத்தினசபாபதி, வி.டி.கலைச்செல்வன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யும்படி சபாநாயருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது.

    உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் சபாநாயகர், 2 எம்எல்ஏக்கள் மீதும் சபாநாயகர் தகுதிநீக்க நடவடிக்கைகளை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த தடை உத்தரவு பிரபுவுக்கு அனுப்பிய நோட்டீசுக்கும் பொருந்தும் என கூறப்பட்டது. இருந்தாலும், சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு உரிய பதில் அளிக்க மேலும் ஒருவாரம் அவகாசம் வேண்டும் என சட்டசபை செயலாளர் சீனிவாசனிடம் பிரபு எம்.எல்.ஏ. மனு அளித்தார்.

    இந்நிலையில், சபாநாயகரின் நோட்டீசுக்கு எதிராக கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில் அவர் இன்று தாக்கல் செய்துள்ள மனுவில், எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய உள்நோக்கத்துடன் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாகவும், தனக்கு எதிராக  நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். #MLAsDisqualification #SpeakerDhanapal
    Next Story
    ×