search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு- முதலிடத்தை பகிர்ந்துக் கொண்ட 13 மாணவ, மாணவிகள்
    X

    சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு- முதலிடத்தை பகிர்ந்துக் கொண்ட 13 மாணவ, மாணவிகள்

    சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் 13 மாணவ, மாணவிகள் 500க்கு 499 மதிப்பெண்கள் எடுத்து முதலிடத்தை பகிர்ந்துக் கொண்டுள்ளனர். #CBSE #CBSE10thResults
    புது டெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் முடிவு வருகிற 23-ம் தேதி வெளியாக இருப்பதால், அதற்கு முன்னதாக பள்ளி பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் மத்திய கல்வி வாரியம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. மே மாதம் 3-வது வாரத்தில் வெளியாக வேண்டிய சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் முன்கூட்டியே கடந்த 2ம் தேதி வெளியிடப்பட்டன.

    இதையடுத்து சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று பிற்பகல் 3 மணியளவில் வெளியிடப்பட்டது.  சிபிஎஸ்இ-யின் cbseresults.nic.in அல்லது cbse.nic.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக, மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.



    இந்நிலையில் இன்று வெளியான தேர்வு முடிவில் நாடு முழுவதும் 91.1% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் திருவனந்தபுரம் 99.85% தேர்ச்சி பெற்று முதலிடத்திலும், சென்னை 99% தேர்ச்சி பெற்று இரண்டாவது இடத்திலும், அஜ்மீர் 95.89% தேர்ச்சி பெற்று மூன்றாவது இடத்திலும் உள்ளது.

    இந்த தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு 499 மதிப்பெண்கள் பெற்று 13 மாணவ, மாணவிகள் முதலிடத்தை பகிர்ந்துக் கொண்டுள்ளனர். 24 பேர் 498 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடம் பிடித்துள்ளனர். மேலும் 58 பேர் 497 மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர். இம்முறையும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #CBSE  #CBSE10thResults

    Next Story
    ×