search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்படும்
    X

    சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்படும்

    சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்படுகிறது. சிபிஎஸ்இ இணையதளத்தில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். #CBSE #CBSE10thResults
    புதுடெல்லி:

    சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த 2ம் தேதி வெளியிடப்பட்டன. மே மாதம் 3-வது வாரத்தில் வெளியாக வேண்டிய தேர்வு முடிவுகள் முன்னதாக எவ்வித அறிவிப்பும் இல்லாமல் திடீரென வெளியானது. பாராளுமன்ற தேர்தல் முடிவு வருகிற 23-ம் தேதி வெளியாக இருப்பதால் அதற்கு முன்னதாக பள்ளி பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் மத்திய கல்வி வாரியம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.
     
    அதன் அடிப்படையில் பிளஸ்-2 தேர்வு முடிவு முன்கூட்டியே வெளியிடப்பட்டது போல் 10-ம் வகுப்பு தேர்வு முடிவையும் முன்கூட்டியே வெளியிட திட்டமிடப்பட்டது. வழக்கமாக பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளிவந்த ஒரு வாரத்தில் 10-ம் வகுப்பு முடிவு வெளிவரும். அதன்படி மே 5-ம் தேதி சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என தகவல் கசிந்தது. ஆனால், தேர்வு முடிவு வெளியாகவில்லை.

    இந்நிலையில், சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. சிபிஎஸ்இ இணையதளங்கள் வாயிலாக, மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

    கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி முதல் மார்ச் 29ம் தேதி வரை நடைபெற்ற சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 27 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினர். #CBSE #CBSE10thResults
    Next Story
    ×