search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாங்கள் பஜனை பாடுவதற்காக அரசியல் மேடை ஏறவில்லை- யோகி ஆதித்யநாத்
    X

    நாங்கள் பஜனை பாடுவதற்காக அரசியல் மேடை ஏறவில்லை- யோகி ஆதித்யநாத்

    தேர்தல் ஆணையம் விதிமீறல் தொடர்பாக தனக்கு அனுப்பிய நோட்டீஸ் குறித்து விளக்கமளித்த உபி முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், அரசியல் மேடைகள் பஜனை பாடல்களை பாடுவதற்காக இல்லை என குறிப்பிட்டுள்ளார். #ECNotice #YogiAdityanath
    லக்னோ:

    உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மீருட் பகுதியில் கடந்த ஏப்ரல் 9ம் தேதி நடைபெற்ற பிரசாரப்பொதுக்கூட்டத்தில் யோகி ஆதித்யநாத் பேசுகையில், 'ஒரு நாளுக்கு முன்னர் மாயாவதி என்ன பேசினார் என்பதை கேட்டிருப்பீர்கள். அவருக்கு முஸ்லிம் மக்களின் வாக்குகளே தேவை.

    மாபெரும் கூட்டணி மற்ற மக்களின் வாக்குகளை விரும்பவில்லை. உங்களுக்கு ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன். காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளுக்கு அலி மீது நம்பிக்கை உள்ளது என்றால், எங்களுக்கு பஜ்ரங்பலி மீது நம்பிக்கை உள்ளது' என பேசினார்.

    மற்றொரு பொதுக்கூட்டத்தில் சமாஜ்வாடி கட்சியின் சம்பால் தொகுதி வேட்பாளர் ஷஃபிகர் ரஹ்மானுடன் உரையாடியதையும் பதிவு செய்து பேசினார்.  

    இதையடுத்து தேர்தல் விதிகளை மீறி பிரசாரத்தில் பேசியதாக கடந்த ஏப்ரல் 11ம் தேதி  தேர்தல் ஆணையம் யோகி ஆதித்யநாத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு பதிலளிக்காத நிலையில், யோகி 72 மணி நேரங்களுக்கு பிரசாரத்தில் ஈடுபட தடை விதிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக யோகி ஆதித்யநாத் இன்று கூறியதாவது:



    தேர்தல் பிரசார மேடைகள் பஜனை பாடுவதற்காக அமைக்கப்பட்டது அல்ல. நாங்களும் அதற்காக மேடை ஏறவில்லை. எதிர்கட்சியினரின் குறைகளை மக்களுக்கு எடுத்துரைப்பது தான் எங்கள் பணி.  காங்கிரஸ், சமாஜ்வாடி போன்ற கட்சிகள் எங்களை தரகுறைவாக பேசி பிரசாரம் செய்து வருகின்றனர். அவற்றை நாங்கள் கண்டு கொள்வதில்லை. இருப்பினும் அவர்கள் பேசியதற்கு பதிலடி கொடுத்தால் மட்டும் எப்படி தவறாகிறது?

    மேலும் சமாஜ்வாடி கட்சியின் சம்பால் தொகுதி வேட்பாளர் ஷஃபிகர் ரஹ்மானுடன் உரையாடினேன். எங்கள் இருவருக்கும் இடையே நடந்த தனிப்பட்ட உரையாடலை பிரசாரத்தின்போது சுட்டிக்காட்டி பேசினேன்.

    இந்த உரையாடலை முன்வைத்து பேசியது தேர்தல் விதிகளை மீறியது என ஆகாது. ஆனால், தேர்தல் ஆணையம் விதிமீறல் என கூறியது. இதுபோன்ற தனிப்பட்ட உரையாடலை நான் தேர்தல் மேடைகளில் எடுத்துரைக்க கூடாது என்றால், வேறு என்னதான் நான் பேச வேண்டும்?

    இவ்வாறு அவர் பேசினார். #ECNotice #YogiAdityanath

      
    Next Story
    ×