search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பானி புயல் எதிரொலி: கொல்கத்தாவில் விமான சேவை ரத்து
    X

    பானி புயல் எதிரொலி: கொல்கத்தாவில் விமான சேவை ரத்து

    ஒடிசாவில் கோபால்பூர் - சந்தபாலி இடையே இன்று பானி புயல் கரையை கடந்தது. இது மேற்கு வங்காளத்தை நோக்கி நகர்கிறது என்பதால் கொல்கத்தாவில் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. #FlightsCancelled #CycloneFani
    கொல்கத்தா:

    ஒடிசா மாநிலத்தில் பானி புயல் இன்று காலை  கரையை கடந்தது. இதையடுத்து, ஒடிசாவின் புரி, கோபால்பூர் உள்ளிட்ட  பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. சாகிகோபால் பகுதியில் மரங்கள் முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். ஒடிசாவில் பல இடங்களில் மின்சார சேவையும், தொலைத் தொடர்பு சேவையும் பாதிப்பு அடைந்துள்ளன.  

    சாலையெங்கும் மரங்கள் சாய்ந்து கிடக்கின்றன. மின் கோபுரங்கள், செல்போன் கோபுரங்கள் சாய்ந்துள்ளன.இந்த சேதங்கள் தொடர்பாக ஒடிசாவின் தலைமை செயலாளர் அனைத்து துறை அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தி வருகிறார்.



    இந்நிலையில் பானி புயல் மேற்கு வங்காளத்தை நோக்கி செல்கிறது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து மேற்கு வங்காளத்தின் முதல் மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி பாராளுமன்ற தேர்தலையொட்டி  பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். புயல் காரணமாக மம்தாவின் அனைத்து பிரசாரக்கூட்டங்களும் இன்றும், நாளையும்  ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து தற்போது கொல்கத்தா விமான சேவை இன்று பிற்பகல் 3 மணி முதல் நாளை காலை 8 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இன்று இரவு 9.30 மணி முதல் நாளை காலை 6 மணி வரை விமான சேவை ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. #FlightsCancelled #CycloneFani  

    Next Story
    ×