search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹிட்லருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு நடிகை ரம்யா தனது டுவிட்டரில் வெளியிட்ட படமும், ஒரிஜினல் படமும்.
    X
    ஹிட்லருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு நடிகை ரம்யா தனது டுவிட்டரில் வெளியிட்ட படமும், ஒரிஜினல் படமும்.

    பிரதமர் மோடியை ஹிட்லருடன் ஒப்பிட்ட நடிகை ரம்யா

    பிரதமர் மோடியை, ஹிட்லருடன் ஒப்பிட்டு நடிகை ரம்யா டுவிட்டரில் கருத்து கேட்டு இருந்தார். ‘போட்டோஷாப்பில்’ திருத்தம் செய்த ஹிட்லர் படத்துடன் மோடியை ஒப்பிட்டதாக பா.ஜனதாவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். #ActressRamya #PMModi #Hitler
    பெங்களூரு :

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சமூக வலைத்தள பிரிவு தலைவியாக இருப்பவர் நடிகை ரம்யா. இவர் மண்டியா பாராளுமன்ற தொகுதி முன்னாள் எம்.பி. ஆவார்.

    இவர் சமூக வலைத்தளங்களில் பா.ஜனதாவுக்கு எதிராகவும், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகவும் பல்வேறு அம்சங்கள் அடங்கிய தகவல்களை பதிவிட்டு வருகிறார். குறிப்பாக, டுவிட்டரில் அவர் பதிவிடும் சில தகவல்கள் அவ்வப்போது பெரும் விவாத பொருளாக மாறி விடுகின்றன.

    இந்த நிலையில், நடிகை ரம்யா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு செய்தார். அதில், ‘சர்வாதிகாரியான’ ஹிட்லர் சிறுமி ஒருவரின் காதை திருகுவது போன்ற படமும், பிரதமர் நரேந்திர மோடி சிறுவன் ஒருவனின் காதை திருகுவது போன்ற படமும் இடம் பெற்று இருந்தது. மேலும், ‘உங்களின் கருத்துகள் என்ன?’ என்று அவர் மக்களிடம் கேள்வி எழுப்பி இருந்தார்.

    நடிகை ரம்யாவின் இந்த டுவிட்டர் செய்தி ‘சர்வாதிகாரி’ ஹிட்லரும், பிரதமர் நரேந்திர மோடியும் ஒரே குணம் கொண்டவர்கள் என்பதை வெளிப்படுத்தும் வகையில் அமைந்து இருந்தது.

    இந்த பதிவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. மேலும், நடிகை ரம்யா பதிவிட்ட ஹிட்லரின் படம் ‘போட்டோஷாப்’ மூலம் திருத்தம் செய்யப்பட்டு உள்ளதாக பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டினர்.



    அதாவது ஹிட்லரின் கைகள், சிறுமியின் தோள் மீது இருக்கும் படத்தை ‘போட்டோஷாப்’ மூலம் திருத்தம் செய்து ஹிட்லரின் கைகள் சிறுமியின் காதுகளை திருகுவது போன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்து உண்மையான படத்தையும் வெளியிட்டனர்.

    மேலும், நடிகை ரம்யாவின் டுவிட்டர் பதிவுக்கு கன்னட காமெடி நடிகர் ‘புல்லட் பிரகாஷ்’ தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அதில் புல்லட் பிரகாஷ் கூறியிருப்பதாவது-

    ‘ரம்யா மேடம் (பத்மாவதி), இந்த குழந்தையை போல் நீங்கள் இருந்த போது உங்களது தந்தை உங்கள் காதை திருகி இருந்தால் நீங்கள் 2 தேர்தல்களில் வாக்களிக்காமல் இருந்திருக்கமாட்டீர்கள். நரேந்திர மோடி பற்றி பேச உங்களுக்கு தகுதியில்லை. நாளை வீடியோ மூலம் பதில் அளிக்கிறேன்’.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டு இருந்தார்.

    இந்த டுவிட்டர் பதிவுக்கு பல்வேறு தரப்பினர் ராகுல்காந்தி மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நடிகை ரம்யா ஆகியோரின் படங்களை பிறருடன் ஒப்பிட்டு தவறான முறையிலும் கருத்து கேட்டு வருவது குறிப்பிடத்தக்கது.  #ActressRamya #PMModi #Hitler
    Next Story
    ×