search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதற்கு ராகுல் மட்டுமே பொறுப்பு: கெஜ்ரிவால்
    X

    பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதற்கு ராகுல் மட்டுமே பொறுப்பு: கெஜ்ரிவால்

    பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதற்கு ராகுல் காந்தி மட்டுமே பொறுப்பு என்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். #Arvind Kejriwal #RahulGandhi #LokSabhaElections2019
    புதுடெல்லி :

    டெல்லியில் முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆம் ஆத்மிக்கு காங்கிரசுடன் கூட்டணி சேர வேண்டும் என்ற கனவு இல்லை, ஆனால் நாட்டை காப்பாற்றவே கூட்டணிக்கு ஒப்புக்கொண்டோம். கூட்டணி அமைக்க எங்களால் முடிந்த அளவு முயற்சி செய்தோம். ஒருவேளை பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஒரே ஒரு நபர் தான் அதற்கு பொறுப்பாக இருக்க முடியும், அது ராகுல் காந்தி தான்.

    டுவிட்டரில் எந்த கூட்டணியை அமைத்தீர்கள் என்று ராகுல் காந்தியிடம் கேட்க விரும்புகிறேன். அவர்கள் கூட்டணி அமைப்பதில் தீவிரமாக இருந்தால், பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மேஜைக்கு வந்திருக்க வேண்டும். மக்கள் மத்தியில் கருத்துகளை தெரிவிப்பதால் எந்த பிரச்சினையும் தீர்ந்துவிடாது.



    தான் இறுதிவரை ஆம் ஆத்மியுடன் கூட்டணிக்கு முயற்சித்ததாக ராகுல் காந்தி கூறுவது, அவரது மனப்பாங்கு. அவர்களுக்கு அப்படி ஒரு எண்ணமே இல்லை.

    காங்கிரஸ் கட்சியால் டெல்லியில் வெற்றிபெற முடியாது. காங்கிரஸ் டெல்லியில் வெற்றி பெறும் நிலையில் இருந்தால், நான் அனைத்து (7) தொகுதிகளையும் காங்கிரசுக்கு வழங்க தயாராக இருக்கிறேன். ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணிக்கு 4:3 தொகுதிகள் என்பது, பா.ஜனதாவுடன் கூட்டணி சேருவது போன்றது தான். அதாவது காங்கிரசுக்கு கொடுக்கும் 3 தொகுதிகளும் தோற்று தான் போகும். பா.ஜனதாவுக்கு 3 தொகுதிகளை கொடுக்க எனது மனசாட்சி அனுமதிக்கவில்லை.

    கேரளா, அரியானா, கோவா, மேற்குவங்காளம், உத்தரபிரதேசம் போன்ற பல்வேறு மாநிலங்களில் எதிர்க்கட்சிகளை காங்கிரஸ் வலுவிழக்கச் செய்துள்ளது. காங்கிரசுக்கு ஒரு இந்துவின் ஓட்டு கூட கிடைக்காது. நாட்டை காப்பாற்ற விரும்பும் அனைத்து மதத்தினரும் ஒருங்கிணந்து ஆம் ஆத்மிக்கு ஓட்டு போடுவார்கள்.

    தொகுதி உடன்பாட்டில் சில நிபந்தனைகளை விதித்தனர். அவை எனக்கு கடினமானதாக இருந்தாலும் அவற்றை நாங்கள் ஏற்றுக்கொண்டதும், டெல்லி தவிர வேறு எங்கும் கூட்டணி இல்லை என்று பின்வாங்கினர். அடுத்த ஆட்சி அமைப்பதில் டெல்லியின் 7 தொகுதிகள் வித்தியாசத்தை ஏற்படுத்தும்.

    இவ்வாறு அவர் கூறினார். Kejriwal #RahulGandhi #LokSabhaElections2019
    Next Story
    ×