search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி கவிழாது: பரமேஸ்வரா உறுதி
    X

    கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி கவிழாது: பரமேஸ்வரா உறுதி

    கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி கவிழாது. கூட்டணி அரசு உறுதியாக உள்ளது. எங்களுக்கு எந்த பயமும் இல்லை என்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வரா கூறியுள்ளார். #LokSabhaElections2019 #MinisterParameshwara
    பெங்களூரு :

    பாராளுமன்ற தேர்தல் கடந்த 23-ந் தேதியுடன் கர்நாடகத்தில் முடிவடைந்தது. எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக ரமேஷ் ஜார்கிகோளி அறிவித்துள்ளார். அவருடன் சில எம்.எல்.ஏ.க்களும் பதவி விலகுவார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் கூட்டணி அரசு விரைவில் கவிழும் என்று பா.ஜனதா தலைவர்கள் கூறி வருகிறார்கள்.

    இந்த நிலையில் முதல்-மந்திரி குமாரசாமியை துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் பெங்களூருவில் நேரில் சந்தித்து பேசினார். கூட்டணி அரசுக்கு எழுந்துள்ள சிக்கல், ரமேஷ் ஜார்கிகோளி எம்.எல்.ஏ. தூக்கியுள்ள போர்க்கொடி குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர். அதன் பிறகு பரமேஸ்வரா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    கூட்டணி அரசு கவிழ்ந்துவிடும் என்று பா.ஜனதாவினர் வெறுமனே சொல்கிறார்கள். ஆனால் இந்த அரசு கவிழாது. கூட்டணி அரசு உறுதியாக உள்ளது. எங்களுக்கு எந்த பயமும் இல்லை. வறட்சி குறித்து முதல்-மந்திரியுடன் ஆலோசனை நடத்தினேன்.

    பாராளுமன்ற தேர்தல் காரணமாக நாங்கள் ஆட்சி நிர்வாகத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. அதனால் ஆட்சி நிர்வாகம் குறித்தும் முதல்-மந்திரியுடன் ஆலோசனை நடத்தினேன்.

    கர்நாடகத்தில் தேர்தல் முடிவடைந்துவிட்டதால், தேர்தல் நடத்தை விதிமுறைகளை ரத்து செய்யுமாறு தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுப்போம்.

    இவ்வாறு பரமேஸ்வரா கூறினார். #LokSabhaElections2019 #MinisterParameshwara 
    Next Story
    ×