search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரசுக்கு போட்ட ஓட்டு பா.ஜனதாவுக்கு விழுந்ததா? -திருவனந்தபுரம் கலெக்டர் விளக்கம்
    X

    காங்கிரசுக்கு போட்ட ஓட்டு பா.ஜனதாவுக்கு விழுந்ததா? -திருவனந்தபுரம் கலெக்டர் விளக்கம்

    எந்த பட்டனை அழுத்தினாலும் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு வாக்கு செல்வதாக தவறான செய்தி பகிரப்படுவதாக திருவனந்தபுரம் கலெக்டர் விளக்கம் அளித்துள்ளார். #LokSabhaElections2019 #ThiruvananthapuramCollector
    கோவளம்:

    கேரளாவில் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. கோவளம் வாக்குச்சாவடியில் கை சின்னத்தை அழுத்தியபோது தாமரைக்கு நேரே விளக்கு எரிந்ததாக புகார் எழுந்ததை அடுத்து வாக்குப்பதிவு இயந்திரம் மாற்றப்பட்டது.

    இயந்திரம் பழுதானதே இந்த குழப்பத்துக்கு காரணம் என திருவனந்தபுரம் கலெக்டர் வாசுகி தெரிவித்துள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து பேஸ்புக் நேரலையில் வந்த திருவனந்தபுரம் கலெக்டர் வாசுகி கூறியிருப்பதாவது:-

    ‘கோவளம் செவ்வரா 151-வது வாக்குச்சாவடியில் எந்த பட்டனை அழுத்தினாலும் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு வாக்கு செல்வதாக தவறான செய்தி பகிரப்படுகிறது. எந்த பட்டனை அழுத்தினாலும் ஒரு கட்சிக்கு வாக்கு விழும் என்பது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியம் இல்லை.

    அப்படி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை மாற்றி அமைக்க சாத்தியமே இல்லை. கோவளத்தில் 76 வாக்குகள் நல்லமுறையில் பதிவு செய்யப்பட்டது. 77வது வாக்கு பதிவின்போது இயந்திரம் பழுதானது. இயந்திரத்தில் சின்னதாக தவறு நடந்துள்ளது. இது போன்ற பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக இயந்திரத்தை மாற்ற வேண்டும் என தேர்தல் கமி‌ஷன் அறிவுறுத்தியுள்ளது.

    அதன்படி உடனடியாக இயந்திரத்தை மாற்றி, தொடர்ந்து வாக்குப்பதிவு நல்லபடியாக நடந்தது’

    இவ்வாறு அவர் கூறினார்.

    கேரள மாநில தலைமை தேர்தல் அதிகாரி டிக்காராம் மீனா கூறியதாவது:-

    ‘கோவளம் சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் தகராறு ஏற்படுவதற்கு முன்பு பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் குறித்து ஆய்வு செய்யப்படும். கேரளத்தில் பல பகுதிகளில் மழை பெய்ததால் ஈரப்பதம் காரணமாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதாகி உள்ளன. மற்றபடி கேரளத்தில் நல்லபடியாக வாக்குப்பதிவு நடந்து வருகிறது’.

    இவ்வாறு அவர் கூறினார்.  #LokSabhaElections2019 #ThiruvananthapuramCollector

    Next Story
    ×