search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பயங்கரவாதிகளிடம் கோழையான அணுகுமுறையை கையாளும் காங்கிரஸ் அல்ல நாங்கள்- பிரதமர் மோடி
    X

    பயங்கரவாதிகளிடம் கோழையான அணுகுமுறையை கையாளும் காங்கிரஸ் அல்ல நாங்கள்- பிரதமர் மோடி

    மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி, நாங்கள் பயங்கரவாதிகளிடம் கோழையான அணுகுமுறையை கையாளும் காங்கிரஸ் அல்ல என கூறியுள்ளார். #LokSabhaElections2019 #PMModi
    நாசிக்:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏப்ரல் 11, 18 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் மீதமுள்ள தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 23,29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.  இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக் மாவட்டத்திற்குட்பட்ட பிம்பல்கலின் பகுதியில் பாஜக சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    இந்தியாவிற்கு அருகிலிருக்கும் இலங்கையில் நேற்று நடந்த குண்டு வெடிப்பில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். 2014ம் ஆண்டுக்கு முன், இந்தியாவில் டெல்லி, மும்பை, அயோத்தியா ஆகிய இடங்களில்  இது போன்ற சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. காங்கிரஸ்- தேசிய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் என்ன செய்தனர்?



    இரங்கல் கூட்டங்களை தான் நடத்திக் கொண்டிருந்தனர். உலகம் முழுவதும் சென்று, பாகிஸ்தான் அதை செய்தது, இதை செய்தது என குறைக் கூறி அழுவதே அவர்கள் செயல். ஆனால், நாங்கள் என்ன செய்தோம்? பயங்கரவாதிகளை கோழைத்தனமாக கையாளும் காங்கிரஸின் அணுகுமுறையை மாற்றினோம்.

    மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த 2 கட்ட தேர்தலில் பாஜகவிற்கு மக்கள் மத்தியில் கிடைத்த செல்வாக்கை நினைத்து எதிர்க்கட்சியினர் தூக்கமின்றி இருக்கின்றனர்.  எனது தலைமையிலான அரசு வெங்காயத்தின் உற்பத்தி உயர்வு மற்றும் போக்குவரத்துக்கான வரிகளை குறைக்கவும் பாடுபடுகிறது.  பயிர் விலைகளை மாற்றி  இடைத்தரகர்களுக்கு வருமானத்தை ஏற்படுத்தி தரும் வகையில்  காங்கிரஸ் செயல்பட்டது. இந்த இடைத்தரகர்களுக்கு எதிராக நான் போராடுவேன்.

    இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #PMModi

    Next Story
    ×