search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படும் - அமித் ஷா திட்டவட்டம்
    X

    அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படும் - அமித் ஷா திட்டவட்டம்

    மேற்கு வங்காளத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, அகதிகளுக்கு உறுதியாக இந்தியாவில் குடியுரிமை வழங்கப்படும் என கூறினார். #Amitshah #BJP
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி, 2 கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்தது. மீதமுள்ள தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக வரும் ஏப்ரல் 23,29 மற்றும் மே 6,12,19 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

    இதையடுத்து பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய தலைவர்கள், பிரமுகர்கள் பிரசாரம், செய்தியாளர் சந்திப்பு ஆகியவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று கொல்கத்தாவில்  நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:

    வங்காள தேசத்தில் இருந்து வரும் அகதிகள் இந்து, புத்தம், சீக்கியம், ஜெயின், கிறிஸ்துவர்கள் என எந்த மதத்தினை சேர்ந்தவராக இருந்தாலும் பாஜக சங்கல்ப பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளதைப்போல இந்திய நாட்டின் குடியுரிமை வழங்கப்படும்.



    முதலில் குடியுரிமை சட்ட மசோதாவில் திருத்தம் செய்யப்படும். பின்னர் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படும். அதன் பின்னர் இந்திய தேசிய குடிமக்கள்  பதிவு கொண்டு வரப்படும். எனவே அகதிகள் யாரும் கவலை கொள்ள தேவையில்லை.

    இந்தியாவில் சட்ட விரோதமாக ஊடுருவும் நபர்கள் தான் கவலை கொள்ள வேண்டும்.  இந்திய தேசிய குடிமக்கள்  பதிவு மேற்கு வங்காளத்திற்கு மட்டுமல்ல. நாட்டில் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Amitshah #BJP





    Next Story
    ×