search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சொல்லாததை சொன்னதாக கூறி சுப்ரீம் கோர்ட்டை ராகுல் அவமதித்து விட்டார் - நிர்மலா சீதாராமன்
    X

    சொல்லாததை சொன்னதாக கூறி சுப்ரீம் கோர்ட்டை ராகுல் அவமதித்து விட்டார் - நிர்மலா சீதாராமன்

    ரபேல் குறித்த சுப்ரீம் கோர்ட் கருத்துகளை ராகுல்காந்தி திரித்து கூறுகிறார்; ராகுல்காந்தியின் கருத்துகள் நீதிமன்ற அவமதிப்பு ஆகும் என ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். #NirmalaSitharaman #RafaleDeal #SC #RahulGandhi
    புதுடெல்லி:

    ரபேல் போர் விமான பேரம் தொடர்பான வழக்கில், சீராய்வு மனுக்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஆவணங்களை ஆய்வு செய்யக்கூடாது என மத்திய அரசு கூறியதை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. 

    இதற்கிடையே, சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு குறித்து கூறுகையில், ரபேல் ஒப்பந்தத்தில் ஏதோ ஒரு விதத்தில் ஊழல் நடந்துள்ளதாக சுப்ரீம் கோர்ட் ஏற்றுக் கொண்டுள்ளது. காவலாளியே திருடனாகி உள்ளார் என தெரிவித்தார். 

    இந்நிலையில், ரபேல் குறித்த சுப்ரீம் கோர்ட் கருத்துகளை ராகுல்காந்தி திரித்து கூறுகிறார்; ராகுல்காந்தியின் கருத்துகள் நீதிமன்ற அவமதிப்பு ஆகும் என ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக, ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    ரபேல் குறித்த சுப்ரீம் கோர்ட்டின் கருத்துகளை ராகுல் காந்தி திரித்துக் கூறுகிறார். ராகுல் காந்தியின் கருத்துக்கள் நீதிமன்ற அவமதிப்பு ஆகும். ரபேல் ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட சில ஆவணங்கள் மட்டும் திருடப்பட்டிருக்கின்றன

    ரபேல் குறித்து வெளியான ஒரு சில ஆவணங்களும் சட்டவிரோதமான முறையில் வெளியாகின. ரபேல் வழக்கில் ஆவணங்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளலாமா, வேண்டாமா என்பதுதான் கேள்வி. ராகுல் காந்தி ஆதாரமின்றி குற்றம் சாட்டி வருகிறார், ராகுல் கூறியது நீதிமன்ற அவமதிப்புக்கு உரியது என தெரிவித்துள்ளார்.
    #NirmalaSitharaman #RafaleDeal #SC #RahulGandhi
    Next Story
    ×