search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடற்படை தளபதி நியமனத்தை எதிர்த்து  துணை தளபதி வழக்கு
    X

    கடற்படை தளபதி நியமனத்தை எதிர்த்து துணை தளபதி வழக்கு

    கடற்படை தளபதியாக இந்திய கடற்படை தளபதி கரம்பிர் சிங் நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து துணை தளபதி பிமல் வர்மா ஆயுதப்படைகள் நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். #IndianNavy #KarambirSingh #BimalVerma
    புதுடெல்லி:

    உலகில் சிறப்பு வாய்ந்த கடற்படைகளில் ஒன்றாக இடம்பெற்றுள்ள இந்திய கடற்படை தளபதி சுனில் லான்பா-வின் பதவிக்காலம் 31-5-2019 அன்று முடிவடைகிறது. இந்நிலையில், புதிய தளபதியாக கரம்பிர் சிங் நியமிக்கப்படுவதாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.

    கரம்பிர் சிங்

    இந்த நியமனத்தை எதிர்த்து ஆயுதப்படைகள் நிர்வாக தீர்ப்பாயத்தில் கடற்படை துணை தளபதி பிமல் வர்மா வழக்கு தொடர்ந்துள்ளார்.

    பணிமூப்பு அடிப்படையில் தளபதி பதவிக்கு தனது பெயரை பரிசீலிக்காமல் கரம்பிர் சிங்-கை நியமனம் செய்தது தவறு என தனது முறையீட்டில் பிமல் வர்மா குறிப்பிட்டுள்ளார்.

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசில் கடந்த 2016-ம் ஆண்டிலும் பணிமூப்பு அடிப்படை புறக்கணிக்கப்பட்டு, ராணுவ தளபதியாக பிபின் ராவத் நியமிக்கப்பட்டது நினைவிருக்கலாம். வெறும் பணிமூப்பு மட்டுமின்றி தனித்திறன் மற்றும் தகுதி அடிப்படையில் பிபின் ராவத் இந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்டதாக முன்னர் விளக்கம் அளிக்கப்பட்டது. #IndianNavy #KarambirSingh #BimalVerma

    Next Story
    ×