search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாயக் கடனுக்கு வட்டி கிடையாது, அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.6000 நிதி உதவி- பாஜக தேர்தல் வாக்குறுதி
    X

    விவசாயக் கடனுக்கு வட்டி கிடையாது, அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.6000 நிதி உதவி- பாஜக தேர்தல் வாக்குறுதி

    விவசாயக் கடனுக்கு வட்டி கிடையாது என்றும், அனைத்து விவசாயிகளுக்கும் நிதியுதவி திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் பாஜக தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளது. #LokSabhaElections2019 #BJPManifesto
    புதுடெல்லி:

    டெல்லியில் இன்று மக்களவைத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பேசியதாவது:-

    ஒவ்வொரு துறையிலும் குழு அமைத்து, விவாதிக்கப்பட்டு பாஜக தேர்தல் அறிக்கை உருவாகி உள்ளது. இந்த தேர்தல் அறிக்கை 130 கோடி மக்களுக்கும் திருப்தி அளிக்கும். புதிய பாரதத்தை நோக்கி பாஜக தேர்தல் அறிக்கை உள்ளது. இந்த தேர்தல் அறிக்கையில் 74 சிறப்பு அம்சங்கள் உள்ளன.

    பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழிக்கும் வரை மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுக்கும்.  தேசப் பாதுகாப்புக்கு மோடி அரசு முன்னுரிமை தரும்.

    கிராமப்புற வளர்ச்சிக்கு 25 லட்சம் கோடி ரூபாயில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.  விவசாய கடனுக்கு வட்டி கிடையாது.  5 ஆண்டுகள் வரை விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும். சிறு விவசாயிகளுக்கான நிதி உதவி திட்டம் அனைத்து விவசாயிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். அதாவது, கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் அனைத்து விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு 6000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும்.

    நதிகளை இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். நதிகள் இணைப்புக்கு தனி ஆணையம் உருவாக்கப்படும். 60 வயதான சிறு குறு விவசாயிகளுக்கு ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.



    நாடு முழுவதும் 75 புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படும். 2022ம் ஆண்டுக்குள் தேசிய நெடுஞ்சாலைகள் இரு மடங்காக விரிவுபடுத்தப்படும். பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.  #LokSabhaElections2019 #BJPManifesto
    Next Story
    ×