search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முஸ்லிம் லீக் வைரஸ் - யோகி ஆதித்யநாத்துக்கு முஸ்லிம் லீக் கடும் கண்டனம்
    X

    முஸ்லிம் லீக் வைரஸ் - யோகி ஆதித்யநாத்துக்கு முஸ்லிம் லீக் கடும் கண்டனம்

    உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்த முஸ்லிம் லீக் வைரஸ் என்ற கருத்துக்கு முஸ்லிம் லீக் கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. #LSpolls2019 #Congress #MuslimLeague #YogiAdityanath #IUML
    திருவனந்தபுரம்:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாராளுமன்ற தேர்தலில் கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். இதையடுத்து நேற்று கேரளாவுக்கு தங்கை பிரியங்காவுடன் சென்ற ராகுல் காந்தி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வயநாட்டில் முஸ்லிம் லீக் ஆதரவுடன் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி போட்டியிட உள்ளது.

    இதற்கிடையே, முஸ்லிம் லீக் என்ற வைரசால் காங்கிரஸ் கட்சி பாதிக்கப்பட்டு உள்ளது என உத்தரபிரதேசம் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், யோகி ஆதித்யநாத் கூறிய முஸ்லிம் லீக் கருத்துக்கு கேரளாவில் உள்ள இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.



    இதுதொடர்பாக, கேரளாவில் உள்ள முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் குன்ஹாலிகுட்டி கூறுகையில், கேரளாவின் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு கிடைத்துள்ள வரவேற்பை பார்த்து பா.ஜ.க. அதிர்ச்சி அடைந்துள்ளது. மேலும், பா.ஜ.க.வினர் உ.பி.யில் காலி நாற்காலிகளை பார்த்து பேசி வருகின்றனர் என கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதேபோல், கேரளா காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரான முள்ளபள்ளி ராமச்சந்திரனும் யோகி ஆதித்யநாத் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.  

    இதுகுறித்து அவர் கூறுகையில், முஸ்லிம் சமுதாயத்தினர் மீது யோகி ஆதித்யநாத் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார். இதன்மூலம் மதமோதல் ஏற்படும் என்ற பதற்றத்தை உருவாக்க முயல்கிறார். ஆதித்யநாத்தின் பிரிவினைவாத அரசியலுக்கு பா.ஜ.க. தலைமை பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்துள்ளார். #LSpolls2019 #Congress #MuslimLeague #YogiAdityanath #IUML
    Next Story
    ×