search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செயற்கைகோளின் சிதைந்த பாகங்கள் 6 மாதத்தில் எரிந்துவிடும்- நாசாவுக்கு இஸ்ரோ விஞ்ஞானி பதிலடி
    X

    செயற்கைகோளின் சிதைந்த பாகங்கள் 6 மாதத்தில் எரிந்துவிடும்- நாசாவுக்கு இஸ்ரோ விஞ்ஞானி பதிலடி

    சோதனையின் போது அழிக்கப்பட்ட செயற்கைகோளின் சிதைந்த பாகங்கள் 6 மாதத்தில் எரிந்துவிடும் என்று நாசாவுக்கு இஸ்ரோ விஞ்ஞானி பதில் அளித்துள்ளார். #MissionShakti #NASA #ISRO
    புதுடெல்லி:

    செயற்கைகோளை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனையை சமீபத்தில் இந்தியா நடத்தியது. அதற்கு ‘மி‌ஷன்சக்தி’ என பெயரிடப்பட்டது. இச்சோதனையில் இந்தியா தாக்கி அழித்த செயற்கைகோள் 400 துண்டுகளாக சிதறி வானில் மிதக்கிறது.

    அவை சர்வதேச விண்வெளி நிலையத்தின் மீது மோதும் ஆபத்து உள்ளது. 2007-ம் ஆண்டு சீனா நடத்திய சோதனையை விட அது ஆபத்தானது என நாசா நிர்வாகி இது ஜிம் பிரின்டென்ஸ்டின் தெரிவித்து இருந்தார்.

    அதற்கு ‘இஸ்ரோ’ தலைவரின் சீனியர் ஆலோசகர் தயின் மிஸ்ரா பதிலடி கொடுத்துள்ளார். குஜராத் தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. அதில் விஞ்ஞானிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று தபான் மிஸ்ரா பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-


    “நண்பர்களுக்கு பல நன்மைகள் செய்திருந்தாலும் கூட உங்களது திருமணத்தின் போது சாப்பாடு சரியில்லை என்று குறைசொல்வது வழக்கம். அதுபோன்று நாம் பலவற்றை வித்தியாசமாக புதுமையாக செய்யும் போது எப்போதும் நமக்கு வாழ்த்துக்கள் கிடைப்பதில்லை. அது வாழ்க்கையின் ஒரு பகுதிதான்.

    அதுபோன்ற நிலை தான் விண்வெளியில் 300 கி.மீ தூரத்தில் நடந்துள்ளது. சோதனையின் போது சிறிய துண்டுகள் விண்வெளியில் 300 கி.மீ தூரத்தில் குறைந்த காற்றழுத்த பகுதியில் உள்ளது. எனவே அவை இன்னும் 6 மாதத்தில் எரிந்து விடும்.

    இந்தியா நடத்திய ‘மி‌ஷன் சக்தி’ வெடிவிபத்து அல்ல. அது ஒரு புல்லட் போன்றது. சீனா விண்ணில் 800 கி.மீ தூரத்தில் பரிசோதனை நடத்தியது. அங்கு அதிக காற்றழுத்தம் இல்லை. இதனால் அதன் சிதைந்த பாகங்கள் விண்ணில் இன்னும் மிதக்கின்றன. ஆனால் இந்தியா தாக்கி சிதைத்த செயற்கைகோள் துண்டுகள் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியில் மிதப்பதால் 6 மாதத்தில் எரிந்துவிடும்” என்றார். #MissionShakti #NASA #ISRO
    Next Story
    ×