search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் செய்தித்தொடர்பாளர்கள்போல் செயல்படும் எதிர்க்கட்சிகள் - பிரதமர் மோடி
    X

    பாகிஸ்தான் செய்தித்தொடர்பாளர்கள்போல் செயல்படும் எதிர்க்கட்சிகள் - பிரதமர் மோடி

    பீகார் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகள் பாகிஸ்தான் செய்தித் தொடர்பாளர்கள்போல் செயல்படுகின்றனர் என குற்றம்சாட்டினார். #LSpolls #PMModi
    பாட்னா:

    பாராளுமன்ற தேர்தல் வரும் 11-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நாடுமுழுவதும் நடைபெறுகிறது. இதையடுத்து, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட வேலைகளில் துரித கதியில் ஈடுபட்டு வருகின்றன.

    பாராளுமன்ற தேர்தலுக்காக கட்சிகளின் முக்கிய தலைவர்கள் தீவிரமாக தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், பீகார் மாநிலம் ஜமுய் பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கருப்புப்பண நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டது. பொருளாதாரம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது. பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்திருந்தது. பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து காணப்பட்டன

    டாக்டர் அம்பேத்கரை காங்கிரஸ் கட்சி அவமதித்த விதத்தை இன்றைய இளைய தலைமுறையினர் அறியவேண்டும். அம்பேத்கரை வீழ்த்த காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு சதித்திட்டங்களை தீட்டினர்.

    புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது. ஆனால், இங்குள்ள எதிர்க்கட்சிகள் பாகிஸ்தான் நாட்டின் செய்தித் தொடர்பாளர்கள் போல் செயல்பட்டு வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளார். #LSpolls #PMModi
    Next Story
    ×