search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விமானம், ரெயில் டிக்கெட்டில் மோடி படம்- ரெயில்வே, விமான போக்குவரத்து அமைச்சகங்களுக்கு நோட்டீஸ்
    X

    விமானம், ரெயில் டிக்கெட்டில் மோடி படம்- ரெயில்வே, விமான போக்குவரத்து அமைச்சகங்களுக்கு நோட்டீஸ்

    விமானம் மற்றும் ரெயில் டிக்கெட்டில் மோடி படம் அச்சிடப்பட்டிருந்தது தொடர்பாக பதில் அளிக்கும் படி ரெயில்வே, விமான போக்குவரத்து அமைச்சகங்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #EC
    புதுடெல்லி:

    டெல்லி விமான நிலையத்தில் சமீபத்தில் பயணிகளுக்கு ஏர் இந்தியா நிறுவனம் வழங்கிய விமான டிக்கெட்டில் பிரதமர் மோடி, குஜராத் முதல்-மந்திரி விஜய் ரூபானி ஆகியோரது படங்கள் அச்சிடப்பட்டிருந்தன.

    தேர்தல் ஆணையத்திடம் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது. அது சர்ச்சையை ஏற்படுத்தியதால் விமான டிக்கெட்டில் இருந்து மோடி படம் வாபஸ் பெறப்பட்டது.

    இந்தநிலையில் ரெயில்வே டிக்கெட்டிலும் பிரதமர் மோடி படம் அச்சிடப்பட்டிருந்ததாக திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் கமி‌ஷனிடம் புகார் கூறி இருந்தது. ரெயில் டிக்கெட்டின் பின்புறம் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சகம் பிரதமரின் வீட்டுவசதி திட்டம் குறித்தும் அவரது போட்டோக்களையும் அச்சிட்டு இருப்பதாகவும் இதன்மூலம் வாக்காளர்கள் மனதில் மோடி குறித்த நல்லெண்ணத்தை உருவாக்க முயற்சி செய்வதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    அதை தொடர்ந்து ரெயில்வே டிக்கெட்டுகளில் இடம் பெற்றிருந்த மோடியின் போட்டோக்களை ரெயில்வே நிர்வாகம் வாபஸ் பெற்றது. மேலும் அத்தகைய டிக்கெட்டுகளை 17 மண்டலங்களிலும் பயன்படுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தியது.’

    இந்தநிலையில் ரெயில்வே மற்றும் விமான போக்குவரத்து அமைச்சகங்களுக்கு தேர்தல் கமி‌ஷன் நோட்டீசு அனுப்பியுள்ளது.

    கடந்த 10-ந்தேதி தேர்தல் அட்டவணை வெளியானவுடன் பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இந்த நிலையில் ரெயில்வே மற்றும் ஏர் இந்தியா நிறுவனத்தின் இத்தகைய செயல் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய செயல். எனவே இதற்கு விளக்கம் அளிக்கும் படியும் வலியுறுத்தப்பட்டுள்ளது. #LSPolls #ElectionCommission #AirIndia
    Next Story
    ×