search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்குப்பதிவு மையங்களில் ஒப்புகை சீட்டு முறையை அதிகரிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல்
    X

    வாக்குப்பதிவு மையங்களில் ஒப்புகை சீட்டு முறையை அதிகரிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல்

    வாக்குப்பதிவு மையங்களில் ஒப்புகை சீட்டு முறையை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் விளக்கம் அளிக்க தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. #SupremeCourt #ElectionCommission
    புதுடெல்லி:

    காங்கிரஸ், தி.மு.க, தெலுங்குதேசம், தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 21 கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தன.

    அதில், பாராளுமன்ற தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் ஏதேனும் ஒரு வாக்குப்பதிவு மையத்தில் ஒப்புகை சீட்டு முறை நடைமுறைப்படுத்தப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது. இந்த நடைமுறையால் மொத்தம் பதிவான வாக்குகளில் 0.44 சதவீத வாக்குகள் மட்டுமே சரிபார்க்க நேரிடும். இதனால் ஒப்புகை சீட்டு முறையின் நோக்கம் நிறைவேறாமல் போகும். எனவே, 50 சதவீத வாக்குப்பதிவு மையங்களிலாவது ஒப்புகை சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என தேர்தல் கமிஷனுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.



    இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்ஜன் கோகாய், நீதிபதி தீபக் குப்தா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதிகள், ஒவ்வொரு தொகுதியிலும் ஏதேனும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு வாக்குப்பதிவு மையத்தில் மட்டும் ஒப்புகை சீட்டு முறையை நடைமுறைப்படுத்துவதை மறுபரிசீலனை செய்வது குறித்த பிரமாண பத்திரத்தை தலைமை தேர்தல் கமிஷன் 28-ந் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்றும், வாக்குப்பதிவு மையங்களில் ஒப்புகை சீட்டு முறையை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தனர். #SupremeCourt #ElectionCommission 
    Next Story
    ×