search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் ராஜீவ் சக்சேனா அப்ரூவராக மாற சி.பி.ஐ. கோர்ட் அனுமதி
    X

    வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் ராஜீவ் சக்சேனா அப்ரூவராக மாற சி.பி.ஐ. கோர்ட் அனுமதி

    வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் கைதான இடைத்தரகர் ராஜீவ் சக்சேனா அரசுதரப்பு சாட்சியாக மாறுவதற்கு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது. #CBIcourt #RajivSaxena #AgustaWestlandcase
    புதுடெல்லி:

    ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் கடந்த 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லான்ட் நிறுவனத்திடம் இருந்து இங்குள்ள முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.  

    இதில், ரூ.360 கோடி லஞ்சப் பணம் இந்தியர்களுக்கு இடைத்தரகர்கள் மூலம் கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதில் இடைத்தரகராக செயல்பட்ட ராஜீவ் சக்சேனா, மைக்கேல் சக்சேனா ஆகியோர்  கைது செய்யப்பட்டு டெல்லியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கை சந்தித்து வருகின்றனர்.  

    கடந்த 6-ந்தேதி நீதிபதி அறையில் நடந்த ரகசிய விசாரணையின்போது இவ்வழக்கில் அரசுதரப்பு சாட்சியாக (அப்ரூவராக) மாறி வாக்குமூலம் அளிக்க விரும்புவதாக ராஜீவ் சக்சேனா தெரிவித்திருந்தார். அமலாக்கத்துறை வழக்கறிஞரும் இதற்கு ஒப்புதல் அளித்தார்.

    இந்நிலையில், இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது ராஜீவ் சக்சேனா அரசுதரப்பு சாட்சியாக மாறுவதற்கு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது. #CBIcourt #RajivSaxena #AgustaWestlandcase  
    Next Story
    ×