search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய விமானப்படையில் சினூக் ஹெலிகாப்டர்கள் இணைப்பு
    X

    இந்திய விமானப்படையில் சினூக் ஹெலிகாப்டர்கள் இணைப்பு

    இந்திய விமானப்படைக்கு மேலும் வலிமை சேர்க்கும் வகையில் சினூக் கனரக ஹெலிகாப்டர்கள் இன்று இணைக்கப்பட்டுள்ளன. #ChinookHelicopter #IAF
    சண்டிகர்:

    அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடம் இருந்து 22 அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் மற்றும் 15 சினூக் ரக ஹெலிகாப்டர்களை கொள்முதல் செய்வதற்கு இந்திய அரசு கடந்த 2015ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. அவற்றில் முதல் கட்டமாக 4 சினூக் ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்பட்டு இந்தியாவுக்கு சமீபத்தில் அனுப்பி வைக்கப்பட்டன. குஜராத் மாநிலம் முந்த்ரா துறைமுகத்தை வந்தடைந்த இந்த ஹெலிகாப்டர்கள், இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. பின்னர் அங்கிருந்து சண்டிகருக்கு கொண்டு வரப்பட்டன.



    இந்நிலையில் சண்டிகர் விமானப்படை தளத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய வரவான சினூக் கனரக ஹெலிகாப்டர்கள் விமானப்படையில் சேர்க்கப்பட்டன. விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா, இந்த ஹெலிகாப்டர்களை முறைப்படி விமானப்படையில் இணைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

    நிகழ்ச்சியில் பேசிய அவர், “நாடு பல்வேறு பாதுகாப்பு சவால்களை எதிர்கொண்டுள்ளது. எனவே, அனைத்து பகுதிகளுக்கும் அதிக எடையுள்ள தளவாடப் பொருட்களை எடுத்துச் செல்லும் திறன்கொண்ட ஹெலிகாப்டர்கள் தேவை. எனவே, மேம்படுத்தப்பட்ட சினூக் ஹெலிகாப்டர்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இது தேசிய சொத்து” என்றார்.

    சினூக் ஹெலிகாப்டர்கள் வரவால் இந்திய விமானப்படையின் திறன் மேலும் அதிகரித்துள்ளது. ராணுவத்தில் பயன்படுத்தப்படும் சிறிய ரக பீரங்கிகள், தளவாடங்கள், எரிபொருள் ஆகியவற்றை, அனைத்து நிலப்பரப்புகளுக்கும் எடுத்துச் செல்ல இந்த ஹெலிகாப்டர்கள் மிக முக்கியமாக பயன்படுத்தப்படும். #ChinookHelicopter #IAF
    Next Story
    ×