search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    7 தொகுதி விவகாரம்-மாயாவதி, அகிலேஷ் யாதவ் கருத்துக்கு பிரியங்காவின் பதிலடி
    X

    7 தொகுதி விவகாரம்-மாயாவதி, அகிலேஷ் யாதவ் கருத்துக்கு பிரியங்காவின் பதிலடி

    சமாஜ்வாடி, பகுஜன் சமாஜுக்கு எதிராக 7 தொகுதிகளில் போட்டி இல்லை என்று காங்கிரஸ் அறிவித்திருந்த நிலையில், மாயாவதி- அகிலேஷ் கருத்திற்கு பிரியங்கா பதிலடி கொடுத்துள்ளார். #Congress #Priyanka
    பிரயாக்ராஜ்:

    பாராளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ்- சமாஜ்வாடி கட்சிகள் கூட்டணி அமைத்து பாஜகவை வீழ்த்த வேண்டும் எனும் எண்ணத்துடன் களமிறங்கியுள்ளன. அதேப்போல், காங்கிரஸ் கட்சியினரும் பாஜகவை வீழ்த்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, மற்றும் முதன்முறையாக களமிறங்கியுள்ள பிரியங்கா, பல்வேறு பிரச்சாரங்களிலும், பொதுக் கூட்டங்களிலும் கலந்துகொண்டு தங்களுக்கான தொகுதிகளில் வெற்றி பெறவும், காங்கிரஸ் கட்சியினை பெரும்பான்மையுடன் வெற்றி பெற வைக்க வேண்டும் எனும் முனைப்புடனும் செயலாற்றி வருகின்றனர்.



    இந்நிலையில், ராகுல்- பிரியங்கா போட்டியிடும் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தப்போவதில்லை என மாயாவதி- அகிலேஷ் கூட்டணி தெரிவித்தது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி மூத்த தலைவர்கள் 7 பேரின் தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்துவது இல்லை என காங்கிரஸ் கட்சி தெரிவித்திருந்தது.

    இதற்கு மாயாவதி- அகிலேஷ் எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்திருந்தனர். இதற்கு பிரியங்கா பதிலடி கொடுத்துள்ளார்.  ‘எந்த கட்சியினரையும், கூட்டணியையும்  காங்கிரஸ் கட்சியினர் எவ்விதத்திலும் தொந்தரவு செய்வதில்லை. எங்களுக்கு யாருடனும் எந்த பிரச்சனையும் இல்லை. எங்களது ஒரே நோக்கம், பாஜகவை வீழ்த்துவதே ஆகும். காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் அதற்கான முயற்சிகளிலும், பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம்’ என பிரியங்கா குறிப்பிட்டுள்ளார்.   #Congress #Priyanka
      
    Next Story
    ×