search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரபேல் ஊழலில் சிக்கி கொண்டதால் ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் காவலாளி ஆக்கிய மோடி - ராகுல் காட்டம்
    X

    ரபேல் ஊழலில் சிக்கி கொண்டதால் ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் காவலாளி ஆக்கிய மோடி - ராகுல் காட்டம்

    கர்நாடக மாநிலம், கலபருகியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ரபேல் பேரத்தில் சிக்கி கொண்ட பிரதமர் மோடி தற்போது ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் காவலாளி ஆக்கிவிட்டதாக தெரிவித்தார். #Rafaledeal #chowkidarModi #Rahul
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம், கலபருகியில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார்.

    முன்னதாக, மறைந்த கோவா முதல் மந்திரி மனோகர் பரிக்கருக்கு மவுன அஞ்சலி செலுத்தும் வகையில் மேடையில் இருந்த பிரமுகர்கள் அனைவரும் 2 நிமிடங்கள் அமைதியாக நின்றனர்.

    பின்னர், பேசிய ராகுல் காந்தி ரபேல் பேரத்தில் சிக்கி கொண்ட பிரதமர் மோடி தற்போது ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் காவலாளி ஆக்கிவிட்டதாக தெரிவித்தார்.

    இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் பிரசாரம் செய்த நரேந்திர மோடி, என்னை இந்த நாட்டின் பிரதமராக்கினால் உங்களது காவலாளியாக இருந்து உழைப்பேன் என்றார். பிரதமரான பிறகு யாருக்கு அவர் காவலாளியாக இருந்திருக்கிறார்? அனில் அம்பானிக்கா, மெகுல் சோக்சிக்கா, நிரவ் மோடிக்கா, லலித் மோடிக்கா? விஜய் மல்லையாவுக்கா? யாருக்காக அவர் காவல் காத்தார்?

    உலகிலேயே மிகப்பெரிய தொகைக்கான ரபேல் போர் விமான பேரத்தில் தொழிலதிபர் அனில் அம்பானிக்கு 30 ஆயிரம் கோடி ரூபாயை தாரைவார்த்து தந்தார். நாட்டின் காவலாளி நான் மட்டுமே என்று முன்னர் மார்தட்டி வந்த பிரதமர் மோடி, ரபேல் விவகாரத்தில் திருடனாக மாட்டிக் கொண்டார். 

    இதில் சிக்கி கொண்ட பின்னர் தன்னை மட்டும் நாட்டின் காவலாளி என்று பேசிவந்த அவர் தற்போது ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் காவலாளி ஆக்கிவிட்டார். அவர் காவலாளி அல்ல ஒரு திருடன் என்பது இந்த நாட்டு மக்கள் அனைவரும் தெரிந்து வைத்துள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார். #Rafaledeal #chowkidarModi #Rahul
    Next Story
    ×