search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ‘காவலன் நரேந்திர மோடி’: டுவிட்டரில் பெயரை மாற்றிய மோடி
    X

    ‘காவலன் நரேந்திர மோடி’: டுவிட்டரில் பெயரை மாற்றிய மோடி

    யாரெல்லாம் ஊழல், சமூக கொடுமைகளை எதிர்த்து போராடுகிறார்களோ அவர்கள் எல்லோரும் காவலன்தான் எனக் குறிப்பிட்ட மோடி தனது டுவிட்டரில் பெயரை மாற்றியுள்ளார். #Modi
    புதுடெல்லி, மார்ச். 17-

    பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. ரபேல் ஒப்பந்த விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். ‘காவலாளி ஒரு திருடன்’ என்று விமர்சித்தார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘நானும் காவலன்தான்’ என்கிற புதிய பிரசார வீடியோவை வெளியிட்டார்.

    மேலும் அந்த பதிவில் ‘‘உங்கள் காவலன் தேசத்துடன் துணை நிற்கிறார். நான் தனி ஆள் கிடையாது. யாரெல்லாம் ஊழல், சமூக கொடுமைகளை எதிர்த்து போராடுகிறார்களோ அவர்கள் எல்லோரும் காவலன்தான்’’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

    இந்தநிலையில் பிரதமர் மோடி இன்று தனது டுவிட்டர் பக்கத்தின் பெயரை மாற்றியுள்ளார். ‘காவலன் நரேந்திர மோடி’ என்று மாற்றம் செய்துள்ளார்.

    இதேபோல் பா.ஜனதா தலைவர் அமித் ஷா தனது டுவிட்டர் கணக்கில் பெயரை ‘காவலன் அமித்ஷா’ என்று மாற்றி உள்ளார். மத்திய மந்திரிகள் ஜே.பி. நட்டா, பியூஸ் கோயல், ஹர்ஸ்வர்தன், தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோரும் தங்களது டுவிட்டர் கணக்கை காவலாளி என்று மாற்றி உள்ளனர்.
    Next Story
    ×