search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி தம்பி கொலை- வீட்டு வேலைக்காரர்கள், உறவினர்களிடம் விசாரணை
    X

    ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி தம்பி கொலை- வீட்டு வேலைக்காரர்கள், உறவினர்களிடம் விசாரணை

    ஆந்திரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி ஒய்.எஸ்.ராஜசேகரரெட்டியின் தம்பி ஒய்.எஸ்.விவேகானந்த ரெட்டி கொலை செய்யப்பட்டது தொடர்பாக வீட்டு வேலைக்காரர்கள் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது. #VivekanandaReddy
    திருமலை:

    ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் தம்பி விவேகானந்த ரெட்டி (வயது 68). இவர் கடப்பா மாவட்டம் புலிவெந்துலாவில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

    விவேகானந்தரெட்டி கடந்த 1989 மற்றும் 94-ம் ஆண்டில் புலிவெந்துலா தொகுதி எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்று ஒருங்கிணைந்த ஆந்திராவில் வேளாண்மை துறை அமைச்சராக பணிபுரிந்துள்ளார்.

    இவரது குடும்பத்தினர் ஐதராபாத்தில் வசித்து வருகின்றனர். விவேகானந்த ரெட்டி அரசியல் சம்பந்தமான வி‌ஷயங்களுக்காக கடப்பா வந்து தங்கி செல்வார்.

    2 முறை கடப்பா எம்.பி.யாவும் பணிபுரிந்த விவேகானந்தரெட்டி தற்போது நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு மற்றும் கட்சி பணிகளை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியுடன் இணைந்து மேற்கொண்டு வந்தார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் தனது சொந்த ஊரான புலிவெந்துலா வந்த விவேகானந்தரெட்டி இரவு பொதட்டூரில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் பங்கேற்று விட்டு வீட்டுக்கு வந்தார்.

    இந்நிலையில் நேற்று காலை விவேகானந்தரெட்டி தனது வீட்டு கழிவறையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து விவேகானந்தரெட்டியின் உதவியாளர் கிருஷ்ணா ரெட்டி புலிவெந்துலா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதில் விவேகானந்த ரெட்டி கழிவறையில் தலை மற்றும் காலில் வெட்டுப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதாக தெரிவித்திருந்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விவேகானந்தரெட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடப்பா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விவேகானந்தரெட்டி உடலில் 7 இடங்களில் சரமாரியாக கத்தியால் வெட்டி கொலை செய்யப்பட்டு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே அவரை கொலை செய்தவர்களை கண்டு பிடிக்க கடப்பா போலீசார் 5 சிறப்பு படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

    விவேகானந்த ரெட்டியின் உறவினர்கள், வீட்டு வேலைக்காரர்களிடம் முதற்கட்ட விசாரணை நடந்து வருகிறது.

    இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென ஜெகன்மோகன் ரெட்டி வலியுறுத்தியுள்ளார்.  #VivekanandaReddy
    Next Story
    ×