search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் அருகில் சென்று இந்திய விமானங்கள் தீவிர போர் பயிற்சி
    X

    பாகிஸ்தான் அருகில் சென்று இந்திய விமானங்கள் தீவிர போர் பயிற்சி

    பாகிஸ்தான் அருகில் சென்று இந்திய விமானங்கள் தீவிர போர் பயிற்சியில் ஈடுப்பட்டதால் எல்லையில் மீண்டும் பதட்டம் ஏற்பட்டது.

    புதுடெல்லி:

    காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ்- இ-முகமது பயங்ரவாதிகள் கடந்த மாதம் 14-ந் தேதி நடத்திய தற் கொலை தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை கடந்த மாதம் 26-ந்தேதி பாகிஸ்தானுக்குள் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தியது. பங்கரவாதிகளின் பாலக்கோட் பயிற்சி முகாம் குண்டுகள் வீசி அழிக்கப்பட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த பாகிஸ்தான் 27-ந் தேதி காஷ்மீருக்குள் புகுந்து குண்டு வீச முயன்றது. ஆனால் பாகிஸ்தான் போர் விமானங்களை இந்திய போர் விமானங்கள் அடித்து விரட்டின.

    இந்த சண்டை காரணமாக எல்லையில் கடும் போர் பதட்டம் ஏற்பட்டது. எல்லையில் தினமும் பாகிஸ்தான் அத்துமீறியதால் பதட்டம் அதிகரித்தது. எல்லை யோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் பாகிஸ்தான் மீண்டும் வாலாட்டினால் கடுமையான பதிலடி கொடுக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இதற்காக இந்திய விமானப்படை உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. நேற்று இந்திய விமானப் படைக்கு சொந்தமான விமானங்கள் திடீரென போர் பயிற்சியில் ஈடுபட்டன.

    நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை காஷ்மீர் எல்லையில் பல இடங்களில் தாக்குதல் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

    அடுத்தடுத்து விமானங்கள் பறந்ததால் எல்லையில் மீண்டும் போர் பதட்டம் நிலவியது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகில் உள்ள எல்லையிலும் இந்திய விமானங்கள் இன்று அதிகாலை திடீர் போர் பயிற்சிகள் செய்தன.

    இதனால் பஞ்சாபிலும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போர் பயிற்சி பற்றி ராணுவ தரப்பில் கூறுகையில், எல்லையில் எந்த சவால் வந்தாலும் சமாளிப்பதற்காக பாதுகாப்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். அதன் ஒரு பகுதியாக இந்த பயிற்சி நடத்தப்பட்டது என்று கூறினார்கள்.

    Next Story
    ×