
மேலும் முகமது ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும், மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டினார். ஆனால் ஹசின் குற்றச்சாட்டை முகமது ஷமி முற்றிலும் மறுத்தார். இது தொடர்பாக கொல்கத்தா நீதிமன்றத்தில் ஹசின் முறையிட்டார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது ஷமி வீட்டிற்குச் சென்று, அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். இதனால் ஷமி மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டார். பின்னர் அதில் இருந்து மீண்ட அவர், இந்திய அணியில் இடம்பிடித்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம் இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தனக்கான இடத்தை உறுதி செய்துள்ளார்.
இந்நிலையில் முகமது ஷமிக்கு எதிராக கொல்கத்தா போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இதில் அவர் மீது வரதட்சணை கொடுமை, பாலியல் கொடுமை பிரிவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.A chargesheet has been filed against cricketer Mohammed Shami. He has been charged under IPC 498A (dowry harassment) and 354A (sexual harrasment).
— ANI (@ANI) March 14, 2019
(file pic) pic.twitter.com/6o6sBbtqY8