search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    58 ஆண்டுகளுக்கு பிறகு குஜராத்தில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் தொடங்கியது
    X

    58 ஆண்டுகளுக்கு பிறகு குஜராத்தில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் தொடங்கியது

    பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் 58 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இன்று தொடங்கியது. #CongressWorkingCommittee #CWCMeeting
    அகமதாபாத்:

    பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தொடங்கியது. சர்தார் வல்லவாய் படேல் தேசிய நினைவிடத்தில் இக்கூட்டம் நடைபெறுகிறது.

    கட்சித்தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் மன்மோகன் சிங், பிரியங்கா, ஏ.கே.அந்தோணி, குலாம் நபி ஆசாத், அகமது படேல், அசோக் கெலாட், நாராயணசாமி, சித்தராமையா, தருண் கோகாய், ஹரிஷ் ராவத் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.



    மகாத்மா காந்தி தண்டி யாத்திரையை தொடங்கிய நாளான இன்று, சபர்மதி ஆசிரமத்தில் பிரார்த்தனை செய்துவிட்டு காரிய கமிட்டி கூட்டத்தை தொடங்கி உள்ளனர். சர்தார் வல்லபாய் படேல் நினைவிடத்தில் அவரது உருவச்சிலைக்கு சோனியா, மன்மோகன்சிங், பிரியங்கா உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர். காரிய கமிட்டி கூட்டம் முடிவடைந்ததும் கட்சி சார்பில், பல்வேறு விவகாரங்களை உள்ளடக்கிய அறிக்கை வெளியிடப்படும்.

    58 ஆண்டுகளுக்குப் பிறகு குஜராத் மாநிலத்தில் காரிய கமிட்டி கூட்டம் நடைபெறுவதால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர். #CongressWorkingCommittee #CWCMeeting
    Next Story
    ×