search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜி-20 நாட்டு தூதர்களுக்கு டெல்லியில் ராகுல், சோனியா காந்தி விருந்து
    X

    ஜி-20 நாட்டு தூதர்களுக்கு டெல்லியில் ராகுல், சோனியா காந்தி விருந்து

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோர் டெல்லியில் இன்று ஜி-20 நாடுகளை சேர்ந்த தூதர்களுக்கு விருந்தளித்தனர். #RahulmeetG20ambassadors #G20ambassadorsmeet #Rahulmeet
    புதுடெல்லி:

    ஜி-20 நாடுகளை சேர்ந்த இந்தியாவுக்கான தூதர்கள் காங்கிரஸ் தலைமையுடன் ஒரு சந்திப்பை ஏற்படுத்தி தரவேண்டும் என அக்கட்சியின் வெளிவிவகாரங்கள் துறை தலைவரான ஆனந்த் சர்மாவுக்கு கோரிக்கைகள் வந்தன.

    இதையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் 15-ம் தேதி வெளிநாட்டு தூதர்களுக்கான விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், இந்த விருந்துக்கு திட்டமிட்டிருந்த தேதிக்கு ஒருநாள் முன்னதாக புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டதற்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

    இந்நிலையில், அந்த விருந்து நிகழ்ச்சி இன்று டெல்லியில் உள்ள பிரபல ஓட்டலில் நடைபெற்றது.



    அமெரிக்கா, சீனா, பிரிட்டன், ஐரோப்பிய யூனியன், அர்ஜென்ட்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியா, மெக்சிக்கோ, ரஷிய கூட்டமைப்பு, சவுதி அரேபியா, துருக்கி, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு தூதர்கள் பங்கேற்று ராகுல் காந்தி, சோனியா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோருடன் சர்வதேச அரசியல், பொருளாதாரம், பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக கலந்துரையாடினர்.

    இந்தியாவின் அண்டைநாடான இலங்கை, பூட்டான், நேபாளம், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த தூதர்களும் இந்த விருந்தில் பங்கேற்றனர்.இதில் கலந்து கொள்ள பாகிஸ்தானுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. #RahulmeetG20ambassadors  #G20ambassadorsmeet #Rahulmeet #G20ambassadors
    Next Story
    ×