search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அயோத்தி பிரச்சினைக்கு தீர்வு காண மத்தியஸ்தர் தேவையா?- தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்
    X

    அயோத்தி பிரச்சினைக்கு தீர்வு காண மத்தியஸ்தர் தேவையா?- தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

    அயோத்தி பிரச்சினைக்கு மத்தியஸ்தர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பான வாதம் முடிவடைந்ததையடுத்து, உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது. #AyodhyaCase #SC
    புதுடெல்லி:

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை மனுதாரர்கள் சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 பிரிவினரும் பிரித்துக்கொள்ள வேண்டும் என அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து 3 தரப்பினரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். மொத்தம் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரித்தது. பின்னர் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.



    கடந்த மாதம் 26-ம் தேதி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்தே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் இவ்வழக்கின் விசாரணை தொடங்கியது. அப்போது, இந்த பிரச்சனையை சுமூகமாக தீர்க்க மத்தியஸ்தரை நியமிக்கலாம் என்று நீதிபதிகள் யோசனை தெரிவித்தனர்.

    அந்த யோசனையை சில முஸ்லிம் அமைப்புகள் ஏற்றுக்கொண்டன. ஆனால் ராம் லல்லா உள்ளிட்ட சில இந்து அமைப்புகள், ஆட்சேபனை தெரிவித்தன. கடந்த காலத்தில் இதுபோன்ற பல முயற்சிகள் தோல்வியில் முடிந்ததாக கூறி இந்த யோசனையை ஏற்க மறுத்தன. இதைத்தொடர்ந்து இந்த வழக்கு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில் அயோத்தி வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இவ்வழக்கில் மத்தியஸ்தரை நியமிக்கும் யோசனைக்கு இந்து அமைப்புகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மத்தியஸ்தர் மூலம் பேச்சுவார்த்தை நடத்தினால் ஏற்க தயார் என முஸ்லிம் மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினார்.

    அனைத்து தரப்பு வாதங்கள் மற்றும் கருத்துக்களை கேட்டறிந்த நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். #AyodhyaCase #SC

    Next Story
    ×