search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குஜராத்தில் புதிய விமான நிலையம் அமைக்கும் ஒப்பந்தத்தை பெற்றது ரிலையன்ஸ்
    X

    குஜராத்தில் புதிய விமான நிலையம் அமைக்கும் ஒப்பந்தத்தை பெற்றது ரிலையன்ஸ்

    குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள ஹிராசார் பகுதியில் புதிய விமான நிலைம் அமைக்ப்பதற்கான ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. #HirasarAirport #Reliance
    மும்பை:

    நமது நாட்டில் விமான போக்குவரத்து தொடங்கி 75 ஆண்டுகள் ஆகின்றன. இதில் பிரதமர் அறிமுகப்படுத்திய, இந்தியாவில் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் குறைந்த கட்டணத்தில் பயணம் செய்யக்கூடிய விமான சேவை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    நம் நாட்டில் சுமார் 400 விமான நிலையங்கள் உள்ளன. அதில் 100-க்கும் மேற்பட்ட விமான நிலையங்களில் விமான சேவை இல்லை. 100 விமான நிலையங்களுக்காவது விமான சேவை தொடங்கப்பட உள்ளது. 

    சிறிய நகரங்களுக்கு விமான போக்குவரத்து தொடங்கியபோது முக்கிய தனியார் விமான நிறுவனங்கள் பங்கேற்க ஆர்வம் காட்டவில்லை. ஆனால், தற்போது விமான சேவையின் விதிமுறைகளை தளர்த்தி இருப்பதால் பல முன்னணி விமான நிறுவனங்கள் பங்கேற்க ஆர்வம் காட்டுகின்றனர்.



    இந்நிலையில், குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள ஹிராசார் பகுதியில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தத்தை  ரிலையன்ஸ் நிறுவனம்  பெற்றுள்ளது. இந்த திட்டத்துக்காக சுமார் 648 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    டிசைனிங், ரன்வே மைப்பது, அடிப்படை வசதிகள், கார்கள் நிறுத்துமிடம், சாலைகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு  பணிகளும் இதில் அடங்கும்.  #HirasarAirport #Reliance
    Next Story
    ×