search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜீவ் காந்தியின் மரணம் படுகொலையா, விபத்தா? - திக்விஜய் சிங்குக்கு மத்திய மந்திரி கேள்வி
    X

    ராஜீவ் காந்தியின் மரணம் படுகொலையா, விபத்தா? - திக்விஜய் சிங்குக்கு மத்திய மந்திரி கேள்வி

    புல்வாமா தாக்குதலை ஒரு விபத்து என்று குறிப்பிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்குக்கு பதிலடி தரும் வகையில் 'ராஜீவ் காந்தியின் மரணம் படுகொலையா, விபத்தா?’ என மத்திய மந்திரி வி.கே. சிங் கேள்வியெழுப்பியுள்ளார். #RajivGandhi #RajivGandhideath #RajivGandhiassassination #VKSingh #IAFairstrike #surgicalstrike2
    புதுடெல்லி:  

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மத்தியப்பிரதேசம் மாநில முன்னாள் முதல் மந்திரியுமான திக்விஜய் சிங். சர்ச்சை கருத்துகளால் அவ்வப்போது அக்கட்சியை தர்மசங்கடமான நிலைக்கு தள்ளுவதுண்டு.

    அவ்வகையில், தற்போது புல்வாமா தாக்குதல் ஒரு விபத்து என அவர் சமீபத்தில் வெளியிட்ட கருத்து பொதுமக்களிடையில் கொந்தளிப்பை உண்டாக்கியதுடன் அரசியல்  வட்டாரத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில்,  திக்விஜய் சிங்கின் கருத்துக்கு வெளியுறவுத்துறை இணை மந்திரியும், ஓய்வுபெற்ற ராணுவ தளபதியுமான ஜெனரல் வி.கே.சிங் இன்று பதிலடி கொடுத்துள்ளார்.

    ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ள பாஜக தலைமையகத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வி.கே.சிங், 'பயங்கரவாதிகளின் தாக்குதலை பயங்கரவாத தாக்குதல் என்றே அழைக்க வேண்டும். உரிய மரியாதையுடன் நான் திக்விஜய் சிங்கிடம் கேட்கும் ஒரு கேள்விக்கு அவர் பதில் அளிக்கட்டும். அதன்பிறகு நீங்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் நாங்கள் பதிலளிக்கிறோம்.



    உங்கள் தலைவர் ராஜீவ் காந்தியின் மரணம் படுகொலையா, விபத்தா?’ என்ற கேள்விக்கு முதலில் நீங்கள் பதிலளிக்க வேண்டும்’ என்றார்.

    பாகிஸ்தானின் பாலகோட் பகுதிக்குள் புகுந்து இந்திய விமானப்படைகள் நடத்திய தாக்குதலில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது தொடர்பாக மத்திய அரசின் சார்பில் சரியான விளக்கம் அளிக்கப்படாதது ஏன்? உரிய ஆதாரங்களை வெளியிடாதது ஏன்? என்று எதிர்க்கட்சிகள் எழுப்பிவரும் கேள்வி தொடர்பாகவும் இந்த பேட்டியின்போது வி.கே.சிங் விளக்கம் அளித்தார்.

    நமது விமானப்படை தாக்குதலில் எத்தனை பயங்கரவாதிகள் இறந்தனர்? என்னும் தலைகணக்கு எடுக்க கேள்வி கேட்பவர்களைதான் தாக்குதல் நடந்த இடத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும். இதில் சரியான எண்ணிக்கையை சொல்வது என்பது ஒன்றடித்தேன், இரண்டடித்தேன் என்று கூறும் ‘கோலி ஆடும் விளையாட்டல்ல’. இது மிகவும் முக்கியமான விஷயம்.

    கடந்த 70 ஆண்டுகளாக நமது படைகள் நடத்திய பல்வேறு தாக்குதல்களுக்கான ஆதாரங்களை யாராவது தந்திருக்கிறார்களா? பாலகோட்டில் நாம் நடத்திய தாக்குதல் தொடர்பாக அனைத்து கட்சியினரும் இந்த நாட்டின் குரலை எதிரொலிக்கும் வகையில் ஒரேகுரலில் பேசுவதாகத்தான் ஆரம்பத்தில் நான் நினைத்தேன்.

    ஆனால், தற்போது பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதால் சிலர் ‘அபஸ்வரத்தில்’ பாட தொடங்கி விட்டனர் எனவும் எதிர்க்கட்சிகளுக்கு வி.கே.சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். #RajivGandhi #RajivGandhideath #RajivGandhiassassination #VKSingh #IAFairstrike #surgicalstrike2
    Next Story
    ×