search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஜகவின் அதிகாரப்பூர்வ இணையதளம் முடங்கியது
    X

    பாஜகவின் அதிகாரப்பூர்வ இணையதளம் முடங்கியது

    பாஜகவின் அதிகாரப்பூர்வ இணையதளம் இன்று திடீரென முடங்கியதால், வலைத்தளத்தில் எந்த தகவலையும் பார்க்க முடியவில்லை. #BJPWebsite #BJPWebsiteHacked
    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மத்தியில் ஆளும் பாஜக தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளது. பிரதமர் மோடி, கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா மற்றும் மத்திய மந்திரிகள் பல்வேறு நகரங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பிரச்சாரம் செய்கின்றனர்.

    கட்சியின் செயல்பாடு மற்றும் தலைவர்களின் பிரச்சார பயணங்கள் அடங்கிய தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் அவ்வப்போது இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இதேபோல் மாநில வாரியாகவும் பாஜகவுக்கு தனியாக இணையதளம் தொடங்கப்பட்டு, தகவல்கள் வெளியிடப்படுகின்றன.



    இந்நிலையில், பாஜகவின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.bjp.org இன்று திடீரென முடங்கியது. பாஜக இணையதளத்தை திறந்தால், திரையில் ‘எரர் 522’ தோன்றியது. வேறு எந்த தகவலையும் பார்க்க முடியவில்லை. இதனை அறிந்த கட்சியின் தகவல் தொழில்நுட்பக்குழு, முடக்கப்பட்ட இணையதளத்தை மீட்டெடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. விரைவில் இணையதளம் செயல்பாட்டிற்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வலைத்தள முடக்கத்திற்கு எந்த ஹேக்கர் குழுவும் பொறுப்பேற்கவில்லை.

    இதேபோல் கடந்த ஆண்டு கோவா மாநில பாஜக இணையதளம் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. #BJPWebsite #BJPWebsiteHacked
    Next Story
    ×