search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குஜராத் பொதுக்கூட்டத்தில் கொச்சிக்கு பதில் கராச்சி என கூறிய மோடி
    X

    குஜராத் பொதுக்கூட்டத்தில் கொச்சிக்கு பதில் கராச்சி என கூறிய மோடி

    கொல்கத்தாவில் இருந்தாலும் சரி, கராச்சியில் இருந்தாலும் சரி, ஆயுஷ்மான் பாரத் சுகாதார அட்டை வைத்திருப்பவர்கள் இலவச சிகிச்சை பெற முடியும் என குஜராத் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். #PMModi #Kochi #Karachi
    ஜாம்நகர்:

    குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள குரு கோவிந்த் சிங் ஆஸ்பத்திரியில் புதிய கட்டிடங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்துவைத்தார்.

    பின்னர் அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் மோடி பேசுகையில், “ஆயுஷ்மான் பாரத் சுகாதார அட்டையை வைத்திருப்பவர்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் சிகிச்சை பெற முடியும். ஜாம்நகர் மக்களான நீங்கள் மத்திய பிரதேச மாநிலம் போபாலுக்கு செல்லும் போது உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டால் மீண்டும் ஜாம்நகருக்கு வரவேண்டியது இல்லை. போபாலில் உள்ள ஆஸ்பத்திரியிலேயே சிகிச்சை பெற முடியும். கொல்கத்தாவில் இருந்தாலும் சரி, கராச்சியில் இருந்தாலும் சரி, ஆயுஷ்மான் பாரத் சுகாதார அட்டை வைத்திருப்பவர்கள் இலவச சிகிச்சை பெற முடியும்” என்றார்.

    இதை கேட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே சுதாரித்துக்கொண்ட மோடி, “நான் கராச்சியை குறிப்பிடவில்லை. கேரள மாநிலம் கொச்சியை தான் குறிப்பிட்டேன்” என்றார்.

    மேலும் அவர் பேசுகையில், “என் சிந்தனை எல்லாம் தற்போது அண்டை நாடு குறித்த விஷயத்தில் தான் உள்ளது. அதனால் தான் கராச்சி என கூறிவிட்டேன். நம் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நாம் திருப்பி தாக்குதல் நடத்த வேண்டுமா? வேண்டாமா?” என கேட்டார். அப்போது அங்கிருந்த மக்கள், “தாக்குதல் நடத்த வேண்டும்” என கரகோஷம் எழுப்பினர்.

    Next Story
    ×