search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தல் -டெல்லியில் உள்ள 6 தொகுதிகளுக்கு ஆம் ஆத்மி வேட்பாளர்கள் அறிவிப்பு
    X

    பாராளுமன்ற தேர்தல் -டெல்லியில் உள்ள 6 தொகுதிகளுக்கு ஆம் ஆத்மி வேட்பாளர்கள் அறிவிப்பு

    பாராளுமன்ற தேர்தலில் டெல்லியில் உள்ள ஏழு தொகுதிகளில் 6 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயரை ஆம் ஆத்மி கட்சி தலைமை இன்று அறிவித்துள்ளது. #ParliamentElection #AamAdmiParty
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. கூட்டணி, தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வு என அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் டெல்லியில் மொத்தம் உள்ள ஏழு தொகுதிகளில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்களை ஆம் ஆத்மி கட்சி தலைமை இன்று அறிவித்துள்ளது.

    டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் கோபால் ராய் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:



    பாராளுமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள ஏழு தொகுதிகளில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இன்று  அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

    கிழக்கு டெல்லியில் அடிஷி, வடமேற்கு டெல்லியில் ககன் சிங், தெற்கு டெல்லியில் ராகவ் சத்தா, வடகிழக்கு டெல்லியில் திலிப் பாண்டே, மேற்கு டெல்லியில் பங்கஜ் குப்தா ராயும் போட்டியிடுவார்கள் என அறிவித்துள்ளார்.

    வேட்பாளர்களான இவர்கள் 6 பேரும் ஆம் ஆத்மி கட்சியின் பாராளுமன்ற தேர்தல் குழு பொறுப்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. #ParliamentElection #AamAdmiParty
    Next Story
    ×