search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அபிநந்தனின் வீரம், சுயநலமின்மை நமக்கெல்லாம் பாடம் - சச்சின் டெண்டுல்கர் புகழாரம்
    X

    அபிநந்தனின் வீரம், சுயநலமின்மை நமக்கெல்லாம் பாடம் - சச்சின் டெண்டுல்கர் புகழாரம்

    அபிநந்தன் தனது வீரம், சுயநலமின்மை மூலம் நமக்கெல்லாம் பாடம் கற்பித்துள்ளதாக சச்சின் டெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார். #AbhinandanReturn #WelcomeHero #WelcomeHomeAbhinadan #SachinTendulkar
    புதுடெல்லி:

    கடந்த மாதம் 27-ம் தேதி இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் விமானத்தை புறமுதுகிட்டு ஓடச் செய்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் எல்லையில் துரதிஷ்டவசமாக பாராசூட்டில் இறங்கினார்.

    பாகிஸ்தான் மேஜரின் கேள்விக்கு வீரமாகவும், விவேகமாகவும் பதிலளித்தார். விமானி அபிநந்தன் பாகிஸ்தானிடம் சிக்கிய சம்பவம் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்தது. இதனை அடுத்து இந்தியா மற்றும் மற்ற உலக நாடுகளின் அழுத்தத்தை தொடர்ந்து விமானி அபிநந்தனை விடுவிக்க அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் உத்தரவிட்டார்.



    இதனைத் தொடர்ந்து,  அபிநந்தனை அட்டாரி-வாகா எல்லையில் ஒப்படைக்க ஏற்பாடுகள் நடந்தன. ராவல் பிண்டியில் உள்ள பாகிஸ்தான் ராணுவ தலைமையகத்தில் இருந்த அபிநந்தன் லாகூர் வரை விமானத்தில் அழைத்து வரப்பட்டார். இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை வாகா எல்லைக்கு அழைத்து வந்து பாகிஸ்தான் ராணுவம் இந்திய அதிகாரிகளிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். இந்திய ராணுவ வீரர்கள் சூழ மிடுக்கான நடையுடன் இந்திய எல்லைக்குள் அடியெடுத்து வைத்தார்.

    இந்நிலையில் அபிநந்தன் வருகையொட்டி கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டரில், “அபிநந்தன் தனது வீரம், சுயநலமின்மை, விடாமுயற்சி மூலம் நமக்கெல்லாம் பாடம் கற்பித்துள்ளார். தனது செயல்கள் மூலம் நம் மீது நம்பிக்கை கொள்ள நமக்கு பாடம் கற்பித்துள்ளார் ” என பதிவிட்டுள்ளார். #AbhinandanReturn #WelcomeHero #WelcomeHomeAbhinadan #SachinTendulkar
    Next Story
    ×