search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அயோத்தி வழக்கு- உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது
    X

    அயோத்தி வழக்கு- உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது

    அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள மேல்முறையீட்டு வழக்கு விசாரணை இன்று தொடங்கியது. #AyodhyaCase #SC
    புதுடெல்லி:

    உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம் 2010-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. மனுதாரர்கள் சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 பிரிவினரும் நிலத்தை பிரித்துக்கொள்ள நீதிமன்றம் யோசனை வழங்கியது. ஆனால் தீர்ப்பை எதிர்த்து 3 தரப்பினரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். மொத்தம் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரித்தது.



    பின்னர் இந்த வழக்குகளை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி இவ்வழக்கு தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான இந்த அமர்வில் ரமணா, லலித், பாப்டே, சந்திரஷூட் ஆகிய நீதிபதிகளும் இடம்பெற்றிருந்தனர்.
     
    ஆனால் அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதிகள் யு.யு.லலித், என்.வி.ரமணா ஆகியோர் அடுத்தடுத்து விலகினர். மற்றொரு நீதிபதி எ.ஏ.பாப்டே விடுப்பில் சென்றார். இதுபோன்ற காரணங்களால் வழக்கு விசாரணை தொடர்ந்து தாமதம் ஆனது.

    அதன்பின்னர் புதிய அமர்வு அமைக்கப்பட்டது. இந்த அமர்வில் தலைமை நீதிபதியுடன், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், அப்துல் நசீர் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர். விடுப்பில் சென்றிருந்த நீதிபதி பாப்டே பணிக்குத் திரும்பியதையடுத்து, அயோத்தி வழக்கு பிப்ரவரி 26-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. அதன்படி இன்று காலை விசாரணை தொடங்கியது. #AyodhyaCase #SC
    Next Story
    ×