search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெங்களூரு விமான கண்காட்சியில் பயங்கர தீ விபத்து - வாகனங்கள் நாசம்
    X

    பெங்களூரு விமான கண்காட்சியில் பயங்கர தீ விபத்து - வாகனங்கள் நாசம்

    பெங்களூரு நகரில் நடைபெற்றுவரும் ‘ஏரோ இந்தியா’ விமான கண்காட்சியில் இன்று பிற்பகல் ஏற்பட்ட தீவிபத்தில் ஏராளமான வாகங்கள் எரிந்து நாசமடைந்தன. #AeroIndia2019 #AeroIndia2019venue #AeroIndiavenue #AeroIndiavenuefire
    பெங்களூரு:

    பெங்களூரு நகரின் புறநகர் பகுதியில் உள்ள ஹெலகங்கா விமானப்படை தளத்தில் ‘ஏரோ இந்தியா’ எனப்படும் இந்திய விமானங்கள் தொடர்பான 12-ம் ஆண்டு கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் 232 நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட 63 விமானங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

    உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விமானங்களின் கண்கவர் சாகச நிகழ்ச்சிகளையும், அங்குள்ள நவீனரக விமானங்களை பார்வையிடுவதற்காகவும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த கண்காட்சிக்கு வருகின்றனர்.

    இன்று காலை இங்குவந்த பிரபல பேட்மின்டன் வீராங்கணை பி.வி.சிந்து தேஜாஸ் போர் விமானத்தில் பறந்து சென்று பார்வையாளர்களை மகிழ்வித்தார்.

    இந்நிலையில், இன்று பிற்பகல் சுமார் ஒரு மணியளவில் கண்காட்சி வளாகத்தில் பார்வையாளர்களின் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படும் பகுதியில் பயங்கரமான தீவிபத்து ஏற்பட்டது.

    ஒரு காரில் திடீரென்று உண்டான தீ மற்ற வாகனங்களிலும் மளமளவென்று பரவியது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வாகனங்களில் விரைந்துவந்த மீட்புப்படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்விபத்தில் சுமார் 100 கார்கள் மற்றும் ஏராளமான இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசமடைந்தன. இதர சேதங்கள் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. #AeroIndia2019 #AeroIndia2019venue #AeroIndiavenue #AeroIndiavenuefire
    Next Story
    ×