search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து - திருப்பதி கோவிலுக்கு நடைபாதை வழியாக சென்றார் ராகுல்
    X

    ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து - திருப்பதி கோவிலுக்கு நடைபாதை வழியாக சென்றார் ராகுல்

    ஆந்திரா மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நடைபாதை வழியாக திருப்பதி கோவிலுக்கு யாத்திரை மேற்கொண்டுள்ளார். #RahulGandhi #RahulGandhiPadyatra ##RahulinTirumala #RahulinTirupati
    திருப்பதி:

    காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி இன்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் ரேணிகுண்டா வந்தார். அங்கிருந்து சாலை வழியாக திருப்பதி வந்த ராகுல், அலிப்பிரி பகுதியிலிருந்து திருமலையில் உள்ள வெங்கடேஸ்வர பெருமாள் சன்னதிக்கு நடைபாதை வழியாக பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார்.

    சுமார் 12 கிலோமீட்டர் தூரத்திலான இந்த பாதயாத்திரையில் அவருடன் பிரியங்காவின் மகன் ரைஹான் வதேராவும் வந்துள்ளார்.



    தெலுங்கானா என்ற தனி மாநிலம் உருவாக்கப்பட்டபோது ஆந்திராவுக்கு சிறப்பு மாநிலத்துக்கான அந்தஸ்துடன் சலுகைகள் அளிக்கப்படும் என முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறிய மோடி தலைமையிலான மத்திய அரசை கண்டித்து இந்த நடைபயணத்தை அவர் மேற்கொண்டுள்ளதாக ஆந்திர மாநில காங்கிரஸ் பிரமுகர்கள் தெரிவித்தனர்.  

    இன்னும் சிறிது நேரத்தில் வெங்கடேஸ்வர பெருமாள் சன்னதியில் சாமி தரிசனம் செய்யும் ராகுல் காந்தி, இன்று மாலை தாரகராமா அரங்கத்தில் நடைபெறும் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். #RahulGandhi #RahulGandhiPadyatra ##RahulinTirumala #RahulinTirupati 
    Next Story
    ×