search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிவி பார்ப்பதில் தகராறு - ஜெய்ப்பூர் சிறையில் பாகிஸ்தான் கைதி கொலை
    X

    டிவி பார்ப்பதில் தகராறு - ஜெய்ப்பூர் சிறையில் பாகிஸ்தான் கைதி கொலை

    ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூர் மத்திய சிறையில் நடந்த மோதலில் பாகிஸ்தானை சேர்ந்த கைதி அடித்துக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. #Pakistanikilled #Jaipurjail
    ஜெய்ப்பூர்:

    பாகிஸ்தானின் சியால்கோட் பகுதியை சேர்ந்தவர் ‌ஷக்ருல்லா என்கிற முகமது ஹனிப்.

    இந்தியாவில் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டதாக கூறி அவர் கைதானார். சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜெய்ப்பூர் கோர்ட்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.

    பாகிஸ்தான் கைதி ‌ஷக்ருல்லா ஜெய்ப்பூரில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். டி.வி.யில் படம் பார்த்துக் கொண்டு இருக்கும்போது நேற்று கைதிகள் இடையே மோதல் ஏற்பட்டது.

    டி.வி.யின் சத்தத்தை குறைக்குமாறு ‌ஷக்ருல்லா கேட்டார். இது தொடர்பாக அவருக்கும், 4 கைதிகளுக்கும் இடையே மோதல் உருவானது. 4 பேரும் சேர்ந்து பாகிஸ்தான் கைதியை அடித்துக் கொன்றனர்.

    சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் போலீஸ் உயர் அதிகாரிகள் நேரில் வந்து கைதிகளிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தினர்.

    அஜித்சிங், குல்விந்தாசிங் உள்ளிட்ட 4 கைதிகள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சிறையில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. #Pakistanikilled #Jaipurjail
    Next Story
    ×